அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு

அம்மா....
அப்போது
நீ தான் எங்கள்
குலவிளக்கு என்றார்கள்
இப்போது
அடிக்கடி எனை
குல விலக்கு செய்கிறார்கள்

அம்மா
நீ தான் எங்களின்
மாட்டுப்பொண்ணு
என்றார்கள்
ஓயாமல் வேலைசெய்து
எனை மாடாகவே
ஆக்கிவிட்டார்கள்

அம்மா
மனம் விட்டு பேசலாம்
என்றே உன்னிடம் வந்தேன்
நீயோ என்னிடம்
குணம் விட்டும்
பேச மறுக்கிறாய்

கட்டியவனிடம்
ஆயிரம் திட்டுக்கள்
வாங்கியாவது
உனை பார்க்க வருகிறேன்
நீயோ ஏன் தனியாக வந்தாய்
என எனையே ஏசுகிறாய்

என் சாமியாக
உனை நினைக்கிறேன்
நீயோ மாமியாகவே
இருக்க ஆசைப் படுகிறாய்
நம்ம வீட்டில் வாழ வந்தவளுக்கு
என்ன கதியோ..

அய்யோ
என்று தணியும் இந்த
கொடுமையின் தாக்கம்
என்று முடியும் எங்கள்
அடிமையின் சோகம்.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (18-Apr-19, 4:04 am)
பார்வை : 250

மேலே