மீண்டும்

சிரிக்கத் தெரிந்த
ஒரே மிருகம்,
மனிதன்..

அடுத்தவன் சிரித்தால்
பிடிக்கவில்லை இவனுக்கு,
அதனால்
கொடுத்தவனே
எடுத்துக்கொள்கிறான்
வரத்தை..

இறங்கிவிட்டான் இவன்
கீழே-
மீண்டும் மிருகமாக...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Apr-19, 7:18 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : meendum
பார்வை : 110

மேலே