தேர்தல் தந்த காதலி

மையிட்ட கண்ணாள் கண்ணில் கட்டிவைத்த
மாயம் என்னவோ அறியேன் அவள்மேல்
மையல் கொண்டேன் நாளையும் கன்னியவளைப்
பார்ப்பேனோ என்ற ஆவலில் நான்,இன்று தேர்தல் 'பூத்திற்கு ' சென்றேன் அங்கு
நேற்று நான் கண்ட கண்ணி கைவிரலில்
மையுடன் மெய்யாக என்முன் காட்சி தர
காட்சி தந்து என்னை ஆட்கொள்ள காதல்
துளிர்த்தது என் உள்ளத்தில் இப்படித்தான்
இந்த தேர்தலில் என்னக்கு இந்த வெற்றி!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (18-Apr-19, 10:27 am)
பார்வை : 133

மேலே