தாயும் …தாரமும்…

ஒரு ஆணின் வாழ்க்கையில் முக்கியமான இருவர் - தாயும் …..தாரமும்……
வீட்டை கோவிலாக மாற்றுபவள் "தாய்"
அந்த வீட்டில் விலக்கேற்றி வைப்பவன் "தாரம்"

ஆணுக்கு உயிர் குடுத்த்து வளர்ப்பவள் "தாய்"
அந்த ஆணுக்கு இன்னொரு தாயை உருவாக்க உதவுவள் "தாரம்"

ஆணுக்கு புத்திமதி சொல்லித்தர முதல் குரு "தாய்"
தாயுக்குப்பின் ஆணை சரியான பாதையை நோக்கி செல்ல உதவுவள் "தாரம்"

தந்தையான மகனையும் குழந்தயாக பார்ப்பவள் "தாய்"
தந்தை பொறுப்பை நிறைவேற்றதில் கைகொடுப்பவள் "தாரம்"

சொல்லாமலே பசி அறிந்து வயிற் நிறைப்பவள் "தாய்"
பசியையும் பட்டினியும் பங்கு போடுவாள் "தாரம்"

அன்பான "தாயும்" அனுசரித்து போகும் "தாரமும்" கிடைப்பது ஆன் பெற்ற வரம்
இந்த இருவர் இல்லாத ஆணின் வாழ்க்கை முழுமை அடையமுடி யற்றது என்பது நிஜம்

"தாயா?" இல்ல "தாரமா?" என்ற கேள்விக்கே இடம் கிடையாது
இவரில் எவரையும் அவமதிக்கவோ அழவைக்கவோ கூடாது
அப்படி வாழும் ஆணின் வாழ்க்கைதான் சிறந்தது

எழுதியவர் : கே. ராகவன் (18-Apr-19, 3:49 pm)
சேர்த்தது : RaghavanK
பார்வை : 208

மேலே