காசி----------------பயணம்

காசி ஒரு சுற்றுலாத்தலம் அல்ல. கேளிக்கைத்தலம் அல்ல. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இடமானாலும் அந்த வரலாற்றைத் தெரிவிக்கும் மிகமுக்கியமான இடங்கள் என ஏதும் இல்லை.

அனைவருக்கும் தெரிந்த இடங்கள், காசியின் விஸ்வநாதர் ஆலயம், காலபைரவர் ஆலயம் போன்றவை. காசியின் மறுகரையில் காசி மன்னரின் அரண்மனையும் அருங்காட்சியகமும் உள்ளது. காசியின் படித்துறையில் நிகழும் கங்கா ஆர்த்தி முக்கியமான நிகழ்வு. அவ்வளவுதான் காசி.

ஆனால் நீங்கள் காசியை உணரவேண்டுமென்றால் சிலநாட்கள் அங்கே தங்கவேண்டும். காசியின் சிறிய சந்துகளில் நடந்து அலையவேண்டும். வரணா முதல் அசி வரையிலான நூற்றி எட்டு படித்துறைகளில் எல்லாவற்றிலும் சில மணிநேரங்கள் அமர்ந்திருக்கவேண்டும். படித்துறைகளுக்கு அப்பாலும் இப்பாலும் உள்ள சாமியார்களின் தங்குமிடங்களுக்குச் சென்றுபார்க்கவேண்டும். கங்கையில் படகில் காலையிலும் மாலையிலும் பயணம் செய்யவேண்டும். ஒவ்வொருநாளும் அங்கே வந்து குழுமும் விதவிதமான மக்களை வேடிக்கை பார்க்கவேண்டும்.

அத்துடன் அரிச்சந்திரா கட்டிலும் மணிகர்ணிகா கட்டிலும் பிணங்கள் எரிவதை முழு இரவும் அமர்ந்து வேடிக்கை பார்க்கவேண்டும். அப்போது காசியைப் பார்த்தவர் ஆவீர்கள்.

ஜெ
October 25, 2012

எழுதியவர் : (19-Apr-19, 4:38 am)
பார்வை : 29

மேலே