புனித வெள்ளி

யூதாஸ் என்னை முத்தமிட்டுக்
காட்டிக் கொடுக்காத அந்நாளில்
ஒலிவ மர நிழலில்
அப்பமும் திராட்சை ரசமும்
என் அப்போஸ்தலர்களுக்கு
நான் பங்கிட்டுக் கொண்டிருக்கவில்லை

அவர்கள் என்னைக் கைது செய்யவுமில்லை
பேதுரு அவர்களிலொருவனின்
செவியை அறுக்கவுமில்லை
நான் அதைக் குணப்படுத்தவுமில்லை

எவனோ ஒரு தச்சன் செய்த சிலுவையை
கற்களும் முட்களும் மிகுந்த சாலையில்
நான் சுமக்கவும் இல்லை
முட்கிரீடம் எனக்கு அணிவிக்கப்படவும் இல்லை
எம்மக்கள் தேவனைத் துதிக்கவுமில்லை

இறுதியாய் என்னை அச்சிலுவையில்
அறையவும் இல்லை
நான் மரித்தும் போகவில்லை
மூன்றாம் நாள் ஞாயிறன்று உயிர்த்தெழப் போவதுமில்லை

நான் இயேசுவாய் இருந்ததில்லை
இருக்கப் போவதுமில்லை என் தேவனே
ஒரு அற்ப ஜீவன் உம் படைப்பில்

எழுதியவர் : mariselvam (19-Apr-19, 11:21 am)
சேர்த்தது : Mariselvam
Tanglish : punitha velli
பார்வை : 22

மேலே