காதல் அகராதி

அன்போடு நீ பார்த்த அந்த
ஒரு நொடி பார்வை...
ஆசையோடு நீ அணைத்த
அந்த ஒரு நொடி நெருக்கம்...
இன்பத்தோடு நாம்
பேசி களித்த அந்த ஒரு
நொடி மொழி
ஈரெழு ஜென்மத்துக்கும்
நீ வேண்டும் என நகர்ந்த
அந்த ஒரு நொடி நேரம்
உன்னோடு மட்டுமே வாழ்ந்திட்ட
அந்த ஒரு நொடி வாழ்க்கை
ஊர்சுற்றி பிறகு
உன்னை சுற்றி வந்த
அந்த ஒரு நொடி பயணம்
எங்கிருந்தாலும் என்னை
வந்து சேர்ந்திடும் ஒரு
நொடியில் உன் நினைவு
ஏக்கங்கள் ஏராளமாய்
கொடுத்திடும் உந்தன்
ஒரு நொடி பிரிவு
ஐம்புலன்கள் என்னில்
இயங்கிட செய்திடும்
உந்தன் நொடி நேர அசைவு
ஒத்தையாக வாழ்ந்த மனதில்
நீ வந்து ஒட்டிய நொடியில்
ஓடை நீரும் தேனோடை ஆக
ஔவை மொழியில் ஆயுள் கூடி
ஃ - என தொடங்கி அ - வரை அடங்கி பல கவிதைகளை
உருக்கி உன் பெயருக்குள் திருகி
வடிதேன் அன்பே.......என் காதலுக்குரிய அகராதியை....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-Apr-19, 10:08 pm)
பார்வை : 29

மேலே