உப்புக்காரு

டேய் உப்புக்காரு, எங்கடா போயிட்ட?
@@@@
என்னங்க பாட்டி உப்பு எடுத்துட்டு போற காரையா கூப்படறீங்க?
@@@@
இல்லடி பொன்மயிலு வடக்க வேலை பாக்கற எங் கடைசிப் பையனோட பேரன். அவம் பேரு உப்புக்காரு.
@@@@
என்ன அநியாயம் பாட்டி உப்புக்காரு, ஊறுகாய்னெல்லாம் பிள்ளைங்களுக்குப் பேரு வைக்கிறதா?
@@@@
நாம என்ன செய்யறது? தமிழ் நாட்டில வசிக்கிற நம்ம பிள்ளைங்களுக்கே தமிழ்ப் பேருங்கள ஆரும் வைக்கறதில்ல. வடக்க வசிக்கிறவங்க இந்திப் பேர வைக்கிறதுதானே நியாயம்.
@@@@@
உம்... அதுவும் சரிதான்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Upkaar = one who helps and serves others

எழுதியவர் : மலர் (20-Apr-19, 10:13 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 78

மேலே