பஜ கோவிந்தம் சுலோகம் 5

பஜ கோவிந்தம் சுலோகம் 5
************************************************
யாவத் வித்தோ பார்ஜன் ஸக்த
தாவந் நிஜ பரிவாரோ ரக்த
பச்சாஜ் ஜீவதி ஜர்ஜரதே ஹே
வார்த்தாம் கோபி நப்ருச்சதி கேஹே !!

பொருள் :=
************
என்றென்றும் பொருளீட்டும் நாட்டம் கொண்டும் அதை நாளுக்கு நாள் பெருக்கிக்
கொண்டிருக்கும் வரையில் தான் அன்னை அண்டியுள்ள உற்றார் உறவினர் தங்கள்
மீது பாசம் கொண்டவர் போல இருப்பர் . அதன் பின் மூப்படைந்து செயலற்று இருப்பின்
வீட்டிலும் வெளியிலும் எவரும் ஒருவார்த்தைகூட பேசமாட்டார்கள் . கேட்கமாட்டார்கள்

பாடல் வரிகளில் =
**************************
" செல்கின்ற செல்வமதை சேர்க்கின்ற நாள்வரையில்
பல்லிளித்து பகட்டாக சுற்றத்தார் உடனிருப்பர்
சொல்லிழந்து சோர்வடைந்து மூப்புநிலை உனையடைய
தள்ளியே சென்றிடுவார் ஓர்வார்த்தை பேசாரே --நன்குணர்ந்து
பாடுவீர் பாடுவீர் கோவிந்தன் புகழ்தன்னை
பாடியே பற்றுவீர் பரமனவன் தாளை !! "

எழுதியவர் : சக்கரைவாசன் (20-Apr-19, 5:47 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 52

மேலே