பாரதியும் பாரதிதாசனும்

பாரதியும்
பாரதிதாசனும்

பாரதி
பூ நூலை
விடுத்தவன்
பாரதிதாசன்
பா நூலைத்
தொடுத்தவன்

அவன்
கவியுலகின்
தாதா
இவன்
கவிஞர்களுக்கெல்லாம்
தாத்தா

அவன்
தமிழன்னைக்குக்
கிடைத்தப் புதையல்
இவன்
அவ்வன்னையின்
கிழிந்த சேலைக்குப்
போட்டான் புது தையல்

அவன்
பன்னாடைகளைப்
பொன்னாடைகளாக்கினான்
இவன்
அப்பொன்னாடைகளைப்
பண் ஆடைகளாக்கினான்

அவன்
புதுவையின் வாசன்
இவன்
அப் புது வைரத்தின்
தாசன்

அவன்
பாண்டிச்சேரிக்குப்
பரிசாய்க் கிடைத்தவன்
இவன்
பாண்டியன்
பரிசைப் படைத்தவன்

அவன்
புலவர்களுக்கெல்லாம்
புலவன்
அவன் ஊற்றிய
கவிநீரில்
வளர்ந்தப்
புல் இவன்

அவன்
எட்டையபுரத்தான்
இவன்
கவிதையின் புகழை
யாரும்
எட்டாபுரத்தான்

அவன்
ஏகலைவன்
இவன்
கை விரல் இழக்காது
மைவிரல் (பேனா) இழந்த
பா கலைவன்
மா தலைவன்

பாரதி
பாற்கடல் கடையாது
நூற்கடல் கடைந்து
அமுதெடுத்த சீனிவாசன்
பரதிதாசனுக்குப்
பிறகு தமிழ்க்கடலில்
முத்தெடுத்தவன் வாணிதாசன்

அவன்
அணிந்தது கருப்பு ஆடை
இவன்
விரட்டத் துணிந்தது
கருப்பு ஆட்டை

எழுதியவர் : புதுவைக் குமார் (20-Apr-19, 10:27 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 56

மேலே