கண்டதும் காதல் இதுதானோ

கண் பார்வையை
நிறுத்தி

என்னைக் கடந்தால்
ஒருத்தி

வானுலக தேவதை
வழிதவறியதோ

தவிர்க்க முடியாத்
தள்ளல்

அவள் அருகே
அழைத்து செல்ல

நான் பார்த்ததை
அவள் பார்க்க

அவள் பார்வையில்

மிரட்சியும் இல்லை
மிரட்டலும் இல்லை

நான் மட்டும்
ஊமையாக

அதற்கு அவள்
காரணமாக

சில்லரையாக சிரித்து
விட்டாள்

முரட்டுகுதிரை என்னை
கடிவாளம்

இன்றி கட்டிவிட்டாள்

கண்டதும் காதல்
இதுதானோ?

எழுதியவர் : நா.சேகர் (21-Apr-19, 12:04 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 381

மேலே