கோவையில் இன்று உரையாற்றுகிறேன்

கோவை கட்டண உரை
-------------------------------------------------
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வருகிற 21-4-2019 ஞாயிறு மாலை 6.00 மணி முதல் 8.15 வரை (தேநீர் இடைவேளையுடன்) இரு பகுதிகளாக ‘வரலாறு, பண்பாடு, நாம் எனும் கற்பனை‘ என்கிற தலைப்பில் ஜெயமோகன் உரை நிகழ்த்துகிறார்.

இக்கூட்டத்திற்கு வரவிரும்புவோர் கீழ்கண்ட கணக்கிற்கு தலா ரூ 300/- செலுத்தி உங்கள்

பெயர்:

தற்போதைய ஊர் :

வயது :

தொழில் :

தொலைபேசி :

மின்னஞ்சல் :

ஆகிய விபரத்துடன் எனக்கொரு தனி மடல் இட்டு முன் பதிவுசெய்து கொள்ளவும். உங்களது பதிவை சரிபார்க்க வேண்டியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் சுமார் 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜி.எஸ்.வி.நவீன்

தொலைபேசி : 74023 89276


இடம் : சேம்பர் ஹால்,

இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரி,

சேம்பர் டவர்ஸ், 8/732 அவினாசி ரோடு, கோவை-641018.

நாள் & நேரம் : 21-4-2019 ஞாயிறு, மாலை சரியாக 6.00 மணி

கோவையில் இன்று 21 4 2019உரையாற்றுகிறேன். கட்டண உரை.

இருப்பிடங்கள் முன்னரே நிறைந்துவிட்டன என்பதனால் அறிவிப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆகவே பண கட்டாதவர்களுக்கு நுழைவொப்புதல் இல்லை

ஏற்கனவே ஆற்றிய இரு உரைகளின் தொடர்ச்சிதான். இந்த உரைகளை நன்கு சிந்தித்து தெளிவடைந்தவற்றை முன்வைக்கும் உரைகள் எனச் சொல்லமாட்டேன். சிலவற்றைச் சொல்லி நானே அறிந்துகொள்ளும் உரைகள் என்பேன். எல்லாச் சிந்தனைகளையும்போல இவை வெவ்வேறு சிந்தனைமுறைகளில் இருந்து எடுத்துக்கொண்ட சரடுகளை தன்னறிதலின் வழியாக முடைந்து ஒன்றை உருவாக்கும் முயற்சி மட்டுமே.

இந்த உரைகள் நம் பண்பாட்டு கட்டமைப்பு, நம் உள்ளம் ஆகியவை சென்ற இருநூறாண்டுகளில் உருவாகி வந்ததைப்பற்றிய ஆய்வுகள். சமூகவியல், மானுடவியல், அரசியல்கோட்பாடு போன்ற அறிவுத்துறைகளை சார்ந்த புறவயமான முறைமைகொண்ட ஆய்வுகள் அல்ல. இலக்கியம் சார்ந்த உள்ளுணர்வின் அடிப்படையிலான அணுகுமுறை என்னுடையது. ஆகவே இலக்கியப்படைப்புகளில் இருந்தே இந்த ஆய்வு நிகழும்.

இவற்றை உரையென நிகழ்த்துவது இவற்றில் எழும் மையமான ஐயங்கள், குழப்பங்களுடன் இவற்றை அணுகியறிந்து என்னுடன் உரையாடும் சிலரை திரட்டிக்கொள்வதற்காகத்தான்ஜெ


(எழுத்தாளர் ஜெயமோகன்.) .

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மிகப் பரவலான கவனத்தை ஈர்த்த புதினங்களை எழுதியுள்ளார். இவரது புனைவுகளில் மனித மனதின் அசாதாரணமான ஆழங்களும் நுட்பங்களும் வெளிப்படும்.

எழுதியவர் : (21-Apr-19, 3:56 am)
பார்வை : 10

மேலே