ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஓர் ஆய்வு

ஜெயமோகன் என்ன எழுதினாலும் அது பெரும் சர்ச்சை ஆகிவிடுகிறது. அவரும் பெரியாரிஸ்டுகள், அம்பேத்கரிஸ்டுகள், இடதுசாரிகள் என்று எல்லாரையும் சகட்டு மேனிக்கு சுழற்றி அடிக்கிறார். அவரை மறுக்க ஒரு பெருங்கூட்டம் புறப்படுகிறது. சில நாட்கள் பின்பு இன்னொரு கட்டுரை, இன்னொறு மறுப்பு.

ஓர் எழுத்தாளர் சமூகப்பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை வெளியிடுவது அவரது உரிமை. ஆனால் ஜெயமோகனின் கருத்துக்களுக்குக் கிடைக்கும் விளம்பரம், அவை தமிழின் முதன்மையான எழுத்தாளரால் வெளியிடப்படுகிறது என்ற பிரச்சாரத்தால்தான்.

ஜெயமோகன் எப்போதிருந்து தமிழிலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கிறார்? எப்படி அந்த இடத்தைப் பிடித்தார்? எதனடிப்படையில் அவர் அங்கே இருப்பதாகக் கருதப்படுகிறது? அவரை அந்த அளவுக்கு வாசகர்கள் மதிக்கிறார்களா? அல்லது அது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பமா? என்பதை தெரிந்துகொள்ள விரும்பினேன். அதற்காக அவரது நூல்கள் எவ்வளவு விற்றுள்ளன என்று ஒரு சிறிய சர்வே எடுத்து பார்க்கலாம் என முடிவெடுத்தேன்.

நாம் பட்டியலிடுகிற விபரங்களில் லைப்ரரி ஆர்டர் எனப்படும் நூலகங்களுக்கான பதிப்புகளும் அடங்கும். கூடவே இப்போதெல்லாம் ஒரு பதிப்பு என்பது 1000 பிரதிகள் என்றில்லை. அவரவர் வசதிக்கு தகுந்தபடி 300, 500 என புத்தகங்கள் போட்டுக் கொள்கிறார்கள். அதன்படி ஜெயமோகனின் நூல்கள் 1000 வீதமா, 500 வீதமா, 300 வீதமா என்று யாருக்கும் தெரியாது. எப்படி இருந்தாலும் அவரது எந்த நூலும் விற்பனையில் சாதனை படைக்கவே இல்லை என்பதைத்தான் எனது தேடலில் கண்டறிய முடிந்தது. அவரது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பம் உடைவதால் ஒரு சின்ன வருத்தம் கூட ஏற்பட்டது.

எண் நூலின் பெயர் வெளிவந்த ஆண்டு பதிப்பு
1 விஷ்ணுபுரம் 1997 5 (19 வருடங்களில்)
2 பின்தொடரும் நிழலின் குரல் 1999 4 (17 வருடங்களில்)
3 கொற்றவை 2005 3 (11 வருடங்களில்)
4 காடு 2003 2 (13 வருடங்களில்)
5 ஏழாம் உலகம் 2000 2 (16 வருடங்களில்)
6 ரப்பர் 1990
2 (26 வருடங்களில்)

7 கன்னியாகுமரி 2000 2 (16 வருடங்களில்)
8 வெள்ளையானை 2013 2


இந்த நூல்கள் எல்லாம் முதலில் நற்றிணை பதிப்பகத்தில் வந்தன. சென்ற ஆண்டு ஏதோ பிரச்சினையில் நூல்கள் விற்றுத் தீராத நிலையிலேயே கிழக்கு பதிப்பகத்துக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனவே இன்னொரு பதிப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த புள்ளிவிபரங்களின்படி பார்த்தால்,

இவருக்கு ஆன்ம வெளிச்சம் பாய்ச்சிய 'விஷ்ணுபுரம்' நாவல் வெளிவந்த ஆண்டு 1997. கடந்த 20 வருடத்தில் அந்த நாவல் 5 பதிப்புகளைக்கூட தாண்டவில்லை. அந்த நாவலின் பெயரில் வருடா வருடம் விருது வேறு கொடுக்கிறார்கள்.
புதுக்காப்பியம் என்கிற பெயரில் இவர் 2௦௦5-இல் எழுதிய 'கொற்றவை' கடந்த 12 வருடங்களில் இதுவரை கண்ட பதிப்புகள் மொத்தம் 3 மட்டுமே.
1999-இல் வெளிவந்த 'பின் தொடரும் நிழலின் குரல்' 18 ஆண்டுகளாகியும் 4-வது பதிப்போடு திணறிக் கொண்டிருக்கிறது.
'ரப்பர்', 'காடு', 'ஏழாம் உலகம்', 'கன்னியாகுமரி', 'வெள்ளை யானை' என பத்துக்கும் மேற்பட்ட நாவல்களின் பதிப்பு பராக்கிரமங்களும் இதே அளவுதான்.
இதில் சிறுகதை தொகுப்புகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். பாரிவேந்தர் பச்சைமுத்து கையில் விருது வாங்கியும் கூட 'அறம்' 6 பதிப்புகள்தான்.
அதைத்தவிர 'திசைகளின் நடுவே'யிலிருந்து 'வெண்கடல்' வரை ஒன்றிரண்டு பதிப்புகள்தான்.
இவர் ஆன்மிகம், தத்துவம், அரசியல், பண்பாடு, வரலாறு என்று அதாவது இந்து ஞான மரபிற்கும், இன்றைய காந்திக்கும், கண்ணகிக்கும் என பக்கம் பக்கமாக எழுதிக் குவித்த நூல்கள் அதன் பக்கங்களின் எண்ணிக்கை அளவிற்கு கூட விற்றிருக்குமா என்றால் சந்தேகம்தான்.
இவைத்தவிர தனது அனுபவம், இலக்கிய விமர்சனங்கள், அறிமுக நூல்கள் என வெளியிட்ட வெளியீடுகளுக்கும் இதே கதிதான்.
நாடகம், சிறுவர் இலக்கியம், தற்காலம், இன்றைய காலம், சமகாலம் என்ற தலைப்பில் ஜெயமோகன் மொழிபெயர்த்தவை, எழுதியவை பதிப்புகளாக வந்திருப்பது பற்றி அவரின் தீவிர விசிறிகளுக்குக்கூட தெரியவில்லை. விசாரித்தால் ‘என் தலைவன் எழுதாதை எழுதியதாகக் கூறி அவதூறு செய்ய வேண்டாம்’ என சட்டென்று நம் முகத்தில் அறைந்தார்போல பேசுகிறார்கள். அப்படியானால் எவ்வளவு விற்றிருக்கும் என நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.
இதேபோல இந்துமதம் சில விவாதங்கள் என்ற நூலுக்கு ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட தமிழ்ஹிந்து வரவேற்பு விமர்சனம் வந்தும்கூட இப்போது அந்த நூலை மறுபதிப்பு போட யாருக்கும் துணிச்சலில்லை.
இத்தனைக்கும் சினிமா வசனகர்த்தா என்ற 'புகழும்' ஜெயமோகனுக்கு இருக்கிறது.

இங்கே நாம் தமிழில் பத்து பதிப்புகளைக் கடந்த மற்ற எழுத்தாளர்களின் நாவல்களை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் தமிழில் எழுதினால் வரவேற்பே கிடைப்பதில்லை என்ற இவர்களின் உள்நோக்கம் கொண்ட காரியவாத புலம்பலை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சுந்தர ராமசாமியின் 'ஒரு புளியமரத்தின் கதை', 'ஜேஜே சில குறிப்புகள்' நாவல்கள் பல பதிப்புகளைக் கண்டுள்ளன. இதில் புளிய மரத்தின் கதை மலிவுப் பதிப்பாக பல்லாயிரம் வெளியிடப்பட்டு அதன் பின்பு இன்னமும் விற்றுக் கொண்டிருக்கிறது.
ப.சிங்கரத்தின் 'புயலிலே ஒரு தோணி'யும் அப்படித்தான்.
'வாடிவாசல்' நாவல் 26000 பிரதிகள் வரை போயுள்ளது.
இன்றையச் சூழலை கணக்கில் கொண்டால், 2004ம் ஆண்டு வெளிவந்த ச.பாலமுருகனின் 'சோளகர் தொட்டி' 10 பதிப்புக்கும் மேல் சென்று விட்டது.
2007ம் ஆண்டு வெளிவந்த, மொழிபெயர்ப்பு நாவலான பி.எச்.டேனியலின் 'எரியும் பனிக்காடு' 10வது பதிப்பு வெளிவந்து விட்டது.
தவிர தரம், வணிக இதழ் பிரபலம் என்றெல்லாம் பேச வாய்ப்பிருக்கிறது என்பதால் ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் எழுத்துக்களைச் சேர்க்கவில்லை. கி.ரா போன்றவர்களின் நூல் பற்றிய தகவல்களை இப்போதைக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. அண்மையில் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்ற நாவல்களைப் பார்த்தால்,

1. 'பார்த்தீனியம்', 'நஞ்சுண்ட காடு' நாவல்கள் வெளிவந்த உடனே இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. இந்நாவலாசிரியர்கள் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் இல்லை என்றாலும் இந்நூல்களுக்கு ஏராளமான விமர்சனக் கூட்டங்களும், விமர்சனங்களும் வெளிவந்துள்ளன.

2. நக்கீரனின் 'காடோடி' நாவலுக்கு இரண்டு ஆண்டுகளில் 30 கூட்டங்களுக்கு மேல் நடந்துள்ளன. சுற்றுச் சூழல் அரங்கில் மிக முக்கியமான நாவலாக காடோடி பேசப்படுகிறது.

3. இவர் புதுக்காப்பியம் என்று கண்ணகியை வைத்து எழுதிய 'கொற்றவை'யுடன் ஒப்பிடும்போது 2014-இல் வெளியான சிலப்பதிகாரத்தை மறுவாசிப்பிற்கு உட்படுத்திய இரா.முருகவேளின் 'மிளிர்கல்' மூன்றே ஆண்டுகளில் 1000 வீதம் 5 பதிப்புகளைக் கண்டுள்ளது.

ஜெயமோகனை விட அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியல் முழுமையானது அல்ல. இன்னும் ஏராளமான எழுத்தாளர்களின் நூல்கள் இருக்கிறார்கள். உதாரணம் தொ.பரமசிவன். அவரது ‘பண்பாட்டு அசைவுகள்’ இதுவரை 14 பதிப்புகள் கண்டு, 15,000 பிரதிகளுக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளது.

தனது ஆக்கங்கள் பெரிய அளவில் வாசகர்களிடம் கவனம் பெறாத நிலையில், அவர் “எழுதும் கலை” என்கிற தலைப்பில் ஒரு வழிகாட்டி நூலை எழுதியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை.

ஒரு தொழிலாளி, ஒரு விவசாயி, ஒரு மாணவர், மகளிர், மீனவர், தலித், பழங்குடி, மத்தியதர வர்க்கம் என சமூகத்தின் எந்தப் பிரிவினராலும் அல்லது அப்பிரிவினர்களின் முன்னோடிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாமல், பெரும்பாலும் பார்ப்பனர்களின் ஒரு பிரிவு மட்டுமே உயர்த்திப் பிடிக்கும் தனது நூல்களின் நாலைந்து பதிப்புகளை வைத்துக்கொண்டு தமிழின் முதல்தர எழுத்தாளன் தான்தான் என தனக்குத்தானே கூறிக்கொள்ள ஒருவரால் முடியுமென்றால் அது ஜெயமோகனால் மட்டுமேதான் முடியும்.

திராவிட எதிர்ப்பு, பெண்ணிய எதிர்ப்பு, சிறுபான்மை எதிர்ப்பு, இந்துத்துவ ஆதரவு ஆகியவற்றை வெளிப்படையாகப் பேச ஆளில்லாத காரணத்தால் இவரை அந்தப் பிரிவு உயர்த்திப் பிடித்தது. ஆனால் ஜெயமோகனால் தன்னை அதற்கு ஏற்றாற்போல வளர்த்துக் கொள்ள முடியவில்லை. நவீன சமூகம் பற்றி அவரால் எழுத முடியவில்லை. சமூகத்தை அவதானிப்பதற்கு ஏற்ற சமூக அறிவு இல்லை. சமூகத்துக்குச் சொல்ல எதுவும் இல்லை. எனவேதான் வெண்முரசில் இறங்கிவிட்டார்.

தனது ஆக்கங்கள் பெரும்பாலானவர்களை சென்று சேரவில்லையென வெளிப்படையாகவே பேசுகிற சாருவிடம் கூட ஒரு நேர்மை இருக்கும். ஆனால் ஜெயமோகன் தனிரகம். ஒன்றுமே இல்லாத மோடியை ஊடகங்கள் காசு வாங்கிக் கொண்டு ஊதிப் பெருக்கியதே… அதே கதைதான் இவருடையதும். மோடிக்கு ஊடகங்கள் இருக்கிறது. இவரோ “தனக்குத் தானே திட்டம்” மூலம் அதை செயல்படுத்தி வருகிறார்.

தான் உன்னதமான, கூர்மையான, ஆழமான எழுத்தை எழுதுவதாக தனக்குத்தானே கூறிக்கொள்ளும் இவரை இன்றுவரை தமிழக வாசகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே மேலே உள்ள விபரங்கள் உணர்த்துகின்றன.

இவர் கல்கி, பாலகுமாரன், ஜெயகாந்தன், சுஜாதா போல பெஸ்ட் செல்லரும் கிடையாது. புதுமைபித்தன் போல சமகால அல்லது கடந்தகால தமிழ்ச் சமூகத்தை அதன் காலத்தை, இடத்தை, அப்போதைய சமூக, அரசியல், பொருளாதார சூழல்களை வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் புனைவாசிரியரும் கிடையாது.

‘நானும் ரௌடி, நானும் ரௌடி’ என்று இவர் கூவிக் கொண்டிருக்கும் காலத்திலேயேதான் பலரின் நாவல்கள், மொழிபெயர்ப்புகள், தத்துவ - அரசியல் நூல்கள் ஆயிரக்கணக்கில் பல பதிப்புகளைத் தாண்டி விற்றுத் தீர்ந்திருக்கிறது.

இவர் ஊடக பிரமை என்றும், குருவிமண்டை என்றும் அருந்ததிராயைச் சொன்னாலும், அது ஜெயமோகனுக்கே அதிகம் பொருந்துகிறது. இப்போது இந்த விபரங்களை பரிசீலிக்கிற எல்லோருக்கும் ஜெயமோகன் ஒரு நல்ல எழுத்தாளர் இல்லையென்பது விளங்கி விடுகிறது. நல்ல ஆக்கங்களை கொடுத்து வாசகர்களிடம் பிரபலமாக முடியாத அவரது இயலாமை சமூகப் பிரச்சினைகள் குறித்து விதண்டாவாத கருத்து சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தவும், அதன்மூலம் பிரபலமடையவும் தூண்டுகிறது.

தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருந்த மற்றவர்களுக்கு வாசகர்கள் கொடுத்திருந்த மதிப்பைப் பார்க்கும் போது ஜெயமோகன் ஒன்றுமே இல்லை. அவர் முதலிடத்திலும் இல்லை என்பதே தெளிவாகிறது. எத்தனை குழந்தைகளுக்கு ஜெயகாந்தன் என்று பெயர்? ஜெயகாந்தன் வருகிறார் என்றால், விடிய விடிய காத்திருந்த கூட்டம்... இத்தனைக்கும் அவர் தெருமுனைகளிலும், கிராமங்களிலும் உழைக்கும் மக்கள் நடுவே பேசினார்.

அண்மையில் ஜெயமோகன் தான் வழக்கமாகச் செல்லும் வங்கியின் ஊழியர்களுக்குத் தன்னைத் தெரிவதில்லை என்று சொல்லியிருந்தார். அதே இடத்தில் சுஜாதாவையோ, பாலகுமாரனையோ வைத்துப் பாருங்கள். மேனேஜர் ஓடி வந்திருப்பார் அல்லவா? இன்றுவரை தங்கள் வீட்டிலும் கடைகளிலும் மு.வ. படத்தை வைத்திருக்கும் அவரது வாசகர்களை நினைத்துப் பாருங்கள்.

மத்தியதர வர்க்கமோ வேறு எந்த வர்க்கமோ அதற்காக ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார்? அவர்கள் ஏன் இவரைக் கொண்டாட வேண்டும்? வாசகர்கள் எல்லோரையும் வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருக்கிறார்கள்.

ஆக அறிவுஜீவிகள்தான் பிம்பங்களைப் பார்த்து குழம்பிப் போய், இவரைத் திட்டி நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பின்குறிப்பு: “எழுதியவனைக் கண்டுபிடித்தல்” என்கிற தலைப்பில் ஜெயமோகன் ஒரு நூலை எழுதி இருக்கிறார். கூடிய விரைவில் அது சாத்தியமாகும்.

- பாவெல் சக்தி

==============================================================================================================
Comments
12
0 #31 ரமேஷ் சிந்தாமணி 2017-04-04 04:01
சங்கன் ராஜேந்திரன் - ஜெயமோகன் தலித்துக்களுக்க ு ஆதரவாக பேசுகிறாரா இல்லையா என்று பாரி செழியன், வே அலெக்ஸ் போன்ற தலித் செயல்பாட்டாளர்க ளிடம் கேட்டுக்கொள்ளுங ்கள். அல்லது ஜெய்மோகனின் வெள்ளையானை கதை என்ன என்று படித்துப்பாருங் கள்.
Quote | Report to administrator
+3 #32 வெ. இளவழகன் 2017-04-04 10:33
விஷ்ணுபுரத்தில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோதும். ஆசிரியரும் பன்னிப் பன்னி சுற்றி வளைத்து கலக்கி இருப்பார்.
ஆனால் எந்தத் தத்துவம் எந்த சமூக அரசியல் பின்னணியில் தோன்றியது என்பது பற்றி மூச்சு விட்டிருக்க மாட்டார்.

உதாரணமாக போர்க்கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரு துறவி சீடர்களுடன் வந்திருப்பார். ஒரு துறவிக்கு அல்லது அந்த மதப் பிரிவுக்கு தத்துவார்த்தப் பயிற்சியோடு போர்ப்பயிற்சியு ம் ஏன் தேவைப்படுகிறது, அந்தக் குறிப்பிட்ட இடத்தின் நிலை என்ன, காலச் சூழல் என்ன என்பது பற்றி எழுதாமல் இதை மட்டும் சொன்னால் ஆசிரியரிடம் ஏதோ குறை இருக்கிறது என்றுதானே அர்த்தம்?

டெம்ப்ளார் நைட்ஸ் பற்றிய விவரிப்புகளை ஐரோப்பிய நாவல்களில் பாருங்கள். வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ. அதில் சிலுவைப் போர்க்காலத்தில் போர்புரியக் கூடிய துறவிகள் மதத்துக்குத் தேவைப்படுவதை எவ்வளவு அழகாகப் புரிய வைத்திருப்பார்.

இதே போல விஷ்ணுபுரத்தில் நூறு உதாரணங்கள் சொல்லலாம். முழுக்க முழுக்க சப்ஜெக்டிவாக எழுதித் தள்ளும் போது எழுத்து கட்டுப்பாடு இல்லாத எஞ்சின் போல சகட்டு மேனிக்கு சுற்றி வருகிறது.

காலம் இடம் அரசியல் பின்னணியில் அமைந்த சித்தார்த்தா போன்ற தத்துவார்த்த தேடலாகவும் இல்லாமல் வரலாற்று நாவலாகவும் இல்லாமல் ஆப் பாயில்டு.

மதம் நிறுவனமாகிறது என்று சொல்வதுதான் நோக்கம் என்றால் ஏன் ஆகிறது எப்படி ஆகிறது அதனால் பலனடைபவர்கள் யார் தனிநபரா வர்க்கமா, சமூகத்தின் புறச்சூழல் எப்படி ஒரு குறிப்பிட்ட தத்துவம் வளர்ச்சி பெறுவதில் பங்காற்றுகிறது என்பதை எல்லாம் தெளிவாக விவாதிக்க வேண்டும்.

நழுவிச் செல்வதால் அயர்ச்சிதான் மிஞ்சுகிறது.
Quote | Report to administrator
+2 #33 ஏழுமலை 2017-04-05 08:42
முதன்மை எழுத்தாளர் யார் என்ற உங்கள் கணக்கீடு அபாரமான அபதம், விற்பனை தான் முதன்மை எழுத்தாளரை தீர்மானிக்கிறதா நல்ல நகைச்சுவை..
பாலகுமாரன் உடையார் 17 பதிப்புகள், மலைவாசல் - சாண்டில்யன் 27 பதிப்புகள் இன்னும் சில எழுத்தாளர் விட்டுவிட்டீங்க உங்கள் ஆய்வில்.? பாக்கெட் நாவல் எழுத்தாளர்கள் விற்பனை தான் அபாரமாக போகிறது அதை விட்டிங்க????
Quote | Report to administrator
0 #34 Trivikram 2017-04-05 12:49
ஜெயமோகன் தமிழ் இலக்கியத்தில் முதலிடத்தில் இருக்கும் எழுத்தாளரா? என்று தலைப்பில் கேட்கிறீர்கள். மிக அருமையான ஒரு கட்டுரையைப் படிக்கப்போகிறேன ் என்ற ஆவலுடன் வாசிக்கத் தொடங்கினேன். விற்பனை பட்டியலுக்கு போனதுமே அடக் கருமமே என்று இருந்தது. இலக்கியத்துக்கு விற்பனை ஒரு அளவுகோலா? என்னைய்யா அபத்தம் இது. ஒன்று நீர் இலக்கியம் என்பது அறியாதவராக இருக்க வேண்டும். அல்லது பஸ் ஜன்னல் கம்பிக்கிடையே கைவிட்டு பாக்கெட் நாவல் விற்பவராக இருக்க வேண்டும். முதலில் எதையவாது வாசியுங்கள் அய்யா.. பிறகு யார் எழுத்தாளர் என்ற ஆராய்ச்சியெல்லா ம் செய்யலாம்.. இப்படி ஒரு தலைப்பை எடுக்க ஜெயமோகனிடம் எதாவது வாங்கி விட்டீரா என்று கேட்கத் தோன்றுகிறது. தண்ணீரை அளக்க இன்ச் டேப் கொண்டு வந்த உன் மேதமையை வைத்து அவர் இரண்டு நாள் தம் தளத்தில் பகடி செய்து கொள்வார். காலக் கொடுமை..
Quote | Report to administrator
0 #35 Victor 2017-04-05 16:10
உங்கள் ஆசானின் மேதமையைப் பார்த்துத்தான் ஊர் சிரிக்கிறதே தெரியவில்லையா? மீம்ஸ், கேலி கிண்டல் எல்லாம் இன்னும் பார்க்கவில்லை போலிருக்கிறது. தரம்தான் இல்லையென்று ஆகிவிட்டது. விற்பனையாவது இருக்கிறதா என்று பார்த்திருக்கிற ார். பட்டுக் குஞ்சலம் கட்டப்பட்டிருப் பது வெளக்குமாறுக்கு என்பது வெட்ட வெளிச்சமாகிவிட் டது.
Quote | Report to administrator
0 #36 ராஜ்குமார் கோவை 2017-04-05 16:17
டால்ஸ்டாய், டாஸ்டாவ்ஸ்கி, புதுமைப் பித்தன், சுரா, சிங்காரத்திலிரு ந்து நேற்று வந்த பாலமுருகன், நக்கீரன், முருகவேள், தமிழ்நதி, குணா கவியழகன் வரை ஆர்வத்துடன் வாசிக்கும் தமிழ் வாசகர்கள்தான் ஜெயமோகனைப் புறக்கணீக்கிறார ்கள். காரணம் கட்டுர்ரையிலேயே இருக்கிறது. ஜெயமோகனின் எழுத்தில் மக்கள் வாழ்க்கை இல்லை. பிரச்சினை பட்டியலில் இல்லை. பட்டியல் ஏறக்குறைய சரியானது. சிக்கல் அவரது எழுத்தில் உள்ளது. அதைச் சரி செய்யாமல் கட்டுரையாளரைக் குறை சொல்லி என்ன பயன்?
Quote | Report to administrator
0 #37 ராஜ்குமார் கோவை 2017-04-05 16:23
1. ஜெயமோகனின் நூல்கள் விற்பனையாவது இல்லை.
2. மற்றவர்கள் எழுதிய நல்ல நூல்கள் நன்றாக விற்பனையாகியுள்ளன.
3. எனவே ஜெயமோகனின் நூல்கள் தரமானவை அல்ல.
ஜெயமோகனின் விஷ்ணுபுரம், கொற்றவை, மற்றும் ஒரு சிறுகதை குறித்து சுருக்கமான ஆனால் கூர்மையான மறுக்க முடியாத விமர்சனங்கள் இந்தக் கட்டுரையில் பின்னூட்டத்திலே யா உள்ளன.

எனவே ஜெயமோகனின் நாவல்களின் தரத்தைக் கணக்கில் கொள்ளவில்லை என்று அவரது ரசிகர்கள் பேசுவது தூங்குவது போல நடிப்பதாகும்.
Quote | Report to administrator
0 #38 பாவை சுப்பிரமணீயம் 2017-04-05 16:29
ஒரு நூலுக்குக் கிடைக்கும் வரவேற்பை அளவிடவும், அதன் தரத்தை மதிப்பிடவும் மூன்று வழிகள் உள்ளன.
1. அதன் விற்பனை.
2. அதற்கு வரும் விமர்சனங்கள்
3. நடக்கும் கூட்டங்கள்

இந்த மூன்றிலுமே ஜெயமோகன் அடிபட்டுப் போகிறார். அப்புறம் ஏன் இந்தப் பதட்டம்? எல்லோரையும் போல அவரும் இருந்து விட்டுப் போக வேண்டியதுதானே? வேடம் என்றாவது ஒருநாள் கலைந்துதானே தீரும்?

ஒரு சிறுகுழுவுக்கு ஜெமோ ஆசான். அவ்வளவுதான். அதை தமிழகம் முழுவதும் விஸ்தரிக்க நினைத்தால் இந்த மாதிரி பட்டியல்கள் வந்து குப்புறத் தள்ளும்.

பாவெல் சக்தி ஒரு சர்வே எடுத்து பட்டியல் போட்டதுதானே உண்மை வெளியே வந்தது. அதுவரை ஆடிய ஆட்டம் சாதாரணமா?
Quote | Report to administrator
0 #39 இளவேனில் ராஜன் 2017-04-05 16:35
சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பாவுடன் ஒப்பிடும் போதே இந்த நிலை. பாலகுமாரன் ராஜேஷ் குமாரோடு ஒப்பிட்டுக் கொள்ளும் ஆசை வேறு இருக்கிறதா? அப்படி ஏதாவது நடந்தால் பூதகண்ணாடி வைத்துத்தான் இந்த ஜெயமோகனைத் தேட வேண்டும். அடிமைகள் எத்தனை கதறித் துடித்தாலும் ஜெயமோகணி உண்மையான நிலை எங்களுக்குப் புரிந்து போய் விட்டது. தரம் எங்களுக்கு முன்பே தெரியும். அது ஒரு வெங்காயமும் இல்லை. ஒரு நண்பர் சொல்லியிருபப்து போல கட்டுப்பாடு இல்லாத இஞ்சின். வெறும் லொட லொட . . . .அறிவு கூர்மை சிறிதும் இல்லாத எழுத்துக்கள். இப்படியொரு சர்வே எடுத்து ஜெயமோகனின் போலி விஸ்வரூபத்தை நொறுக்கிய பாவெல் சக்திக்கு வாழ்த்துக்கள்.
Quote | Report to administrator
0 #40 சுந்தர்ராஜன் கே 2017-04-05 16:42
பெண் எழுத்தாளர்களையு ம், சிறுபான்மையினரை யும், பொதுவுடமையினரைய ும், பெரியாரியல்வாதி களையும் சிறுமைப்படுத்தி எழுதும் இவரது எழுத்துக்களைப் படித்து இவரா தமிழில் முதன்மையான எழுத்தாளர் என்று மனம் வெதும்பியிருந்த ேன். இந்த இழிவைத் தமிழ் எப்படித் துடைக்கப் போகிறது என்ற பதட்டம் இவர் ஒவ்வொரு முறை இந்துத்துவ வெறியர்களுக்கும ் மோசடி சாமியார்களுக்கு ம் ஆதரவாக பிற்போக்குக் கருத்துக்களை வெளியிடும் போதும் என்னைத் தொற்றிக் கொள்ளும். இவர் தமிழ் கூறும் நல்லுலகால் குப்பையைப் போல தூக்கி வீசப்பட்டவர் என்பதை அம்பலப் படுத்திய பாவெல் சக்தி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வாழ்த்துக்கள்.
Quote | Report to administrator
0 #41 வசந்தன் தமிழன் 2017-04-05 17:00
ஜெயமோகனின் உலோகம் நாவல் பற்றிய தமிழ்நதியின் கட்டுரைக்கு உங்கள் பதில் என்ன? பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் போன்ற நாவல்கள் குறித்து இடதுசாரிகளும் மற்ற நண்பர்களூம் எழுதிய விமர்சனங்களுக்க ு என்றாவது உருப்படியான பதில் அளித்திருக்கிறீ ர்களா? வெண்முரசு பற்றி உங்கள் முன்னாள் நண்பர்கள் செய்து வரும் விமர்சனங்கள் உங்களுக்குத் தெரியாது என்று நடிக்காதீர்கள். அப்புறம் என்ன தரத்தைப் பாருங்கள், விற்பனையைப் பார்க்காதீர்கள் என்ற பம்மாத்து? தரம் விற்பனை எதுவும் உருப்படியில்லை என்பதுதான் வெட்ட வெளிச்சமாகிவிட் டதே
Quote | Report to administrator
0 #42 திருப்பூர் குணா 2017-04-05 17:22
ஏழுமலை , Trivikram இருவருக்கும் விற்பனை ஒரு எழுத்தாளரின் தரத்தை தீர்மானிக்க வில்லையென்றால் வேறு எது தீர்மானிக்கிறது என்று சொல்லவும். வாசகர்களால் கொண்டாடப்படாத குப்பையை இலக்கியம் என்று சொல்வது என்னவகை மனச்சிக்கல்? மூலைல எங்கேயோ சில அசடுகள் மட்டுமே படிக்கிறதை எழுதிவிட்டு நான்தான் பெரிய புடலங்கா என ஜெயமோகன் சொல்கிற அதே திமிர் அதை படிக்கிற ஒருசில அசடுகளிடமும் இருக்கிறது. நாங்கள்தான் இலக்கிய தரநிர்ணயிப்பாளர ் என்று திமிருக்கிற அந்த ஒன்றிரண்டுகளும் அளவுகோல் என்னவென்று சொல்வதேயில்லை.
Quote | Report to administrator
-1 #43 எஸ்.ராமன், வேலூர் 2017-04-05 18:18
ஆமாம், மறு அச்சு என்றால் என்ன?
மறு பதிப்பு என்றால் என்றால் என்ன?
இரண்டுக்கும் என்ன வேறுபாடு என்ன?

ஒரு பதிப்பில் அச்சிடப்பட்ட நூல்கள் விற்பனையாகி விட்டால் மறு பதிப்பு செய்வார்கள் என்பது என் புரிதல்.

மறு அச்சு என்று புதிதாக ஏதோ ஒன்றை ஆசான் கொண்டு வருகிறாரே?

பாவம், அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு போல. அவரது அடிமைகளையும் சமாளிக்க ஏதாவது எழுதிட வேண்டும் அல்லவா?

அதிமுக அடிமைகள், ஆசான் அடிமைகளை விட பெட்டர் என்றே தோன்றுகிறது.
Quote | Report to administrator
+1 #44 ரமேஷ் சிந்தாமணி 2017-04-05 19:17
மக்களின் சாப்பாட்டு பிரச்ச்னையை பேசாததினால் விஷ்ணுபுரத்தை போல கம்பராமாயணத்தைய ும் நல்ல இலக்கியம் அல்ல என்று சொல்லிவிடுவீர்க ளோ? குடும்ப்பக்கதைய ாக இருப்பதால் தால்ஸ்தாயின் போரும் வாழ்வும் கேவலமானது என்றாகிவிடுமா ?

அதே நேரத்தில் ஜெயமோகனின் அறம், வெள்ளையானை, ஏழாம் உலகம் போல மக்கள் பிரச்சினைகளை நேரடியாக பேசும் படைப்புகளை ஏன் இருட்டடிப்பு செய்கிறீர்கள்?

இலக்கியத்தரம் என்பது அழகியல், மொழியியல், உளவியல் என்று பலவற்றினால் உருவாவது. சங்கப்பாடல்களுக ்கு உண்டான அடர்த்தியும், கம்பனில் இருக்கும் அழகும், புதுமைப்பித்தனி ல் ஜெயகாந்தனில் இருக்கும் வேகமும், தால்ஸ்தாய் தாஸ்தாவெஸ்கி இருவ்ரில் இருக்கும் ஆன்மாவும் அசோகமித்திரனின் ஒருங்கே கொண்டவை ஜெயமோகனின் படைப்புக்கள். அவர் என்றும் வாழ்வார்
Quote | Report to administrator
0 #45 எஸ்.ராமன், வேலூர் 2017-04-05 20:50
வெள்ளை யானை பற்றியும் அயோத்திதாசர் பற்றியும் சில அடிமைகள் புல்லரித்து எழுதியிருக்கிறார்கள்.

சென்னை நகரத்து தலித் மக்கள் வாழ்வு குறித்தும் அயோத்திதாசர் குறித்தும் ஜெமோ தவறாக சித்தரித்ததற்கு பதிலடியாகவே, உண்மை நிலையை எடுத்துச் சொல்லவுமே தான் "வலம்" எழுதியதாக எழுத்தாளர் வினாயக முருகன் அதன் வெளியீட்டு விழாவில் பேசியதும் அதனை தோழர் ஆதவன் தீட்சண்யா ஆமோதித்ததும் நினைவுக்கு வருகிறது,

ஆசான் எழுதுவதுதான் எழுத்து என்ற மாய வலையில் சிக்கிக் கொண்டுள்ளவர்களு க்கு அதிர்ச்சி வைத்தியம் போதாது. மூளை மாற்று அறுவை சிகிச்சைதான் வேண்டும்
Quote | Report to administrator
0 #46 ரமேஷ் சிந்தாமணி 2017-04-06 02:54
ராமன் - முதலில் ஜெயமோகன் அடிபட்ட மக்களைப்பற்றி எழுதவே இல்லை என்கிறீர்க்ள். ஆதாரங்களுடன் மறுத்தால் வேறு யாரோவும் எழுதியிருக்கிறா ர்களே என்கிறீர்கள்.மு தலில் சற்று ஒழுங்காக பேசுங்கள்.

உண்மை வரலாறு வெள்ளையானைக்கு புறம்பானதல்ல என்று படித்திருந்தால் உங்களுக்கு புரியும். (அடுத்தவர் பேசியதை மேற்கோள் காட்ட நீங்கள் எதற்கு? படித்திருந்தால் மட்டுமே பேசவும்)

எங்களை அடிமைகள் என்று மீண்டும் மீண்டும் சொல்லும் உங்களை கற்பூர வாசனை தெரியாதவர் என்று அழைக்கலாமா ?
Quote | Report to administrator
0 #47 திருப்பூர் குணா 2017-04-06 08:13
ரமேஷ் சிந்தாமணி கம்பராமாயணம் ஆளும்வர்க்க தரப்பிலிருந்து மக்கள் பிரச்சினையை அது பேசுகிறதென்பதை அறியாத உங்களுக்கு ஒரு ஓ. சங்கப்பாடல், கம்பன், புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன், தால்ஸ்தாய், தாஸ்தாவெஸ்கி, அசோகமித்திரன் எல்லாம் மக்களால் கொண்டாடப்படுகிற வர்கள். அதுக்கு உங்க ஆளு லாயக்கில்லைன்கி றதுதான் விமர்சனம். நீங்க ஜெமோ-வை வலிந்து வலிந்து இந்த வரிசையில் திணித்து சுயாதிருப்தி அடைவதை தோலுரித்துதான் கட்டுரை. எந்த அருவருப்புமில்ல ாமல் திரும்பவும் அதே வேலையை செய்றீங்களே அதுக்கு ஒரு ஓ...
Quote | Report to administrator
0 #48 எஸ்.ராமன், வேலூர் 2017-04-06 08:56
திரு ரமேஷ் சிந்தாமணி, உங்களுக்கெல்லாம ் மூளை மாற்று அறுவை சிகிச்சை அவசியம் என்பதை நன்றாகவே நிரூபித்துள்ளீர்கள்.

//ராமன் - முதலில் ஜெயமோகன் அடிபட்ட மக்களைப்பற்றி எழுதவே இல்லை என்கிறீர்க்ள். ஆதாரங்களுடன் மறுத்தால் வேறு யாரோவும் எழுதியிருக்கிறா ர்களே என்கிறீர்கள்.மு தலில் சற்று ஒழுங்காக பேசுங்கள்.//

என்னுடைய எந்த பின்னூட்டத்தில் நீங்கள் சொன்னது போல எழுதியுள்ளேன் என்று காண்பியுங்கள்.

காகிதத்திற்கு கேடாக உங்கள் ஆசான் பக்கம் பக்கமாக எழுதியதை வாஙகிப் படிக்கும் அளவிற்கு நான் என்ன உங்களைப் போல ????

முதலில் ஒரு விஷய்த்தை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆசானை அவர் சொல்கிற அறத்தோடு முதலில் எழுதச் சொல்லுங்கள். பிற்போக்குத் தனமாக, ஆணவமாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தால் அடி வாங்கிக் கொண்டுதான் இருக்க வேண்டும்.

அடுத்தவரை நான் மேற்கோள் காட்டக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளீ ர்கள்.. மகிழ்ச்சி. அதே லாஜிக் படி அடுத்தவருக்காக நீங்கள் வக்காலத்து வாங்க வேண்டாம்.

ஆசானே இங்கு வந்து பேசட்டும்.

ஜெமோ எழுதுவதை பாராட்டாதவர்கள் எல்லாம் கழுதைகள் என்று சொல்கிறீர்கள். நன்றி. இதுதான் ஜெமோ உருவாக்கியுள்ள ஞான சூனிய மரபு
Quote | Report to administrator
0 #49 Theetharappan 2017-04-06 21:00
எதுக்கு இத்தகைய சர்சைகள் என்று எனக்கு தெரியவில்லை. எது யாருக்கு சாத்தியம் இருக்கோ அதை அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள். எழுத்தை விமர்சனம் செய்வது தப்பில்லை. எழுத்தாளன் லிப்ஸ்டிக் போடல.இன்னும் கொஞ்சம் மேக்கப் போட்டிருந்தா நல்லாயிருக்கும் என்று சொல்லி செல்வதால் என்ன பயன்? சில எழுத்தாளர் தன் எழுத்துக்கு உரிய தார்மீக த்தை கொடுக்கிறார்களா என்பது தான் முக்கியமே ஒழிய அதை விட்டு ஒரு பரபரப்பை உண்டாக்கி அதன் மூலம் தனக்கான அடையாள வெளிச்சத்தை தேடி சதா முயங்கி கொண்டிருப்பதை பார்த்தால் எனக்கு பல நேரங்களில் எரிசசலாக உள்ளது. எந்த ஒரு எழுத்தாளரும் எது நல்ல எழுத்து என்று சுட்டி காட்ட முடியாது. வாசகர்கள் தான் தேடி செல்ல வேண்டும்.
இப்படிக்கு
இரா.மீ.தீத்தாரப்பன்
Quote | Report to administrator
0 #50 பாவெல் 2017-04-07 01:26
யாருய்யா இது ரமேஷ் சிந்தாமணி ? ஆசானே பேக் ஐடில வந்து பேசுற மாதிரி குயப்பமா ஈக்குது..
Quote | Report to administrator
0 #51 திருப்பூர் குணா 2017-04-08 10:18
Theetharappan உண்மையை பேசுகிறார். எது யாருக்கு சாத்தியமோ அதைத்தான் அவர் செய்ய முடியும் என்ற இவரின் கருத்து சரியானது. ஜெமோவால் இவ்வளவுதான் முடியுமென்ற அவரின் ஒப்புதல் வாக்குமூலம் அங்கீகரிக்கப்பட வேண்டியது. அப்புறம் எழுத்தாளரின் அங்க அவயங்களை குறைகூறுகிற ஜெமோவையும் அவர் கண்டிப்பது மிகச்சரியே. அருந்ததி ராயை குருவிகொண்டை என்று இழிவுபடுத்தியதை உலகம் மறக்காது. அது சரி, இவையனைத்தையும் இவர் நேரடியாக சொல்லியிருக்கலா மே
Quote | Report to administrator
0 #52 ரமேஷ் சிந்தாமணி 2017-04-08 20:01
அதிகம் அறிவில்லாதவர்கள ை ஆங்கிலத்தில் bird brained என்பார்கள். அருந்ததிராய்க்க ு குருவிமண்டை என்ற பட்டப்பெயர் அதனாலேயே. திருப்பூர் குணாவுக்கு மண்டை கொண்டையாகத் தெரியும் காரணம் என்ன? அது சரி, ஜெயமோகன் யாருடைய அங்க அவயங்களை குறைகூறியுள்ளார ்? அப்படி சொன்னது யார் ? போகிறபோக்கில் சொல்லிவிட்டு எதோ சொல்லாதீர்கள்.

தீத்தாரப்பனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”எந்த ஒரு எழுத்தாளரும் எது நல்ல எழுத்து என்று சுட்டி காட்ட முடியாது” என்னும்போது அவருக்கு தமிழ் இலக்கியம் பற்றி எதுவுமே தெரியாது என்பது வெட்டவெளிச்சமாக ிறது. ஜெயமோகன் எழுத்தாளர் மட்டுமல்ல, தமிழின் மிகப்பெரும் திறனாய்வாளரும் விமர்சகரும் கூட. ஏறக்குறைய முப்பது இலக்கிய விமர்சன நூல்கள் எழுதியுள்ளார், மிகப் புகழ்பெற்றவை. தமிழ்நதி போன்றவர்கள் அவரிடமிருந்து சர்டிபிகேட் கிடைக்கவில்லை என்பதினாலேயே பொருமிக்கொண்டே இருக்கிறார்கள். தீத்தாரப்பன் முதலில் வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்க ும் எழுத்தாளர்களுக் கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளட் டும்.
Quote | Report to administrator
0 #53 எஸ்.ராமன், வேலூர் 2017-04-11 19:30
சந்தேகமே வேண்டாம். ஆசானே பல ஃபேக் ஐ.டி களுக்குள் ஆவியாக புகுந்து கொண்டு எழுதுவது போலத்தான் தெரிகிறது.
Quote | Report to administrator
+1 #54 ரமேஷ் சிந்தாமணி 2017-04-12 03:11
க்கும், இந்த ஒண்னாங்கிளாஸ் உரையாடலுக்கு எல்லாம் ஜெயமோகனே வந்து உங்களுடன் மல்லுக்கட்டுவார ் என்ற எதிர்பார்ப்பெல் லாம் மிகவும் அதிகம். நான் ஜெயமோகனின் ஃபேக் ஐடி அல்ல, பேக்கு ஐடியும் அல்ல, சராசரி வாசகன், நம்மில் சிறந்த சாதனையாளர்களை மதிப்பவன், அவ்வளவே.





















Hari 2019-02-07 20:07
நான் கூட சீரியசாக படித்து கொண்டிருந்தேன். .. அவருடைய படைப்புகள் அதிகமாக படித்ததில்லை ஆனால் அவருடைய கட்டுரைகளை விரும்பி படிப்பேன் அவருடைய எழுத்து நடை மிக நீண்டதாக இருந்தாலும் அறிவுபூர்வமாக இருப்பதாக நான் உணர்வேன் அதற்கும் சில விஷயங்கள் நீங்கள் கூறும் போது முதலில் இது உண்மை தன்மையோடு இருப்பதாக தான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் கடைசியாக நீங்கள்... உங்களுடைய சுயரூபம் நீங்கள் யார் என புரிந்தது...
இது காழ்புணர்ச்சி என்று உணர்கிறேன்..

உடனே என்னை வந்து இந்துத்துவா அந்த துவா என முடிவாக வேண்டாம்.

இருக்கட்டும் சார் அவர் கொஞ்சம் வாசகர்களுக்காகவ ே எழுதுவது ஆகவே இருக்கட்டும் ஏனென்றால் பகுத்தறியும் அறிவாளிகள் தமிழ்நாட்டில் கொஞ்சமே

எழுதியவர் : (21-Apr-19, 4:14 am)
பார்வை : 38

மேலே