"கோபம்"

செந்தமிழன் என எவன் சொன்னான்,
என் தமிழனை,

தேகம் சூடேறும்....
அங்கே சூடேற்றப்படுகிறது,

உச்சி குளிரும்.....,
உச்சியில் குளிர் காயப்படுகிறது,

தங்கம் புதைக்கப்பட்ட காலம் போய்,
இன்று எங்கள் அங்கம் புதைக்கப்படுவதேனோ..,

கடலுக்கு அப்பால் வாழும் என் தாய் குலங்களுக்கு
எப்படி புரிய வைப்பேன்,
அது கடலல்ல நம் கண்ணீர் குளம் என்று..,

யாழ் பாணமது, இன்றோ ரத்த பானமானது..,

வாழ்ந்தவர் கோடி
நம்மிடம் அன்று..,

வாழ இடம் தேடி
நம்மினம் இன்று....,

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (3-Sep-11, 7:27 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 400

மேலே