பாலியல் குற்றச்சாட்டு தன்மீதான புகாரை விசாரிக்கும் அமர்வில் தலைமை நீதிபதி இருக்கலாமா- கேள்வி எழுப்பும் வழக்கறிஞர்கள்

தன் மீது முன்னாள் நீதிமன்ற ஊழியர் கூறிய பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் அமர்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்ந்திருந்து 2 கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஒன்று, தன் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் அமர்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இருக்க முடியுமா? இரண்டாவது கேள்வி, தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் எழுந்தால் அதை விசாரிக்க இதுதான் முறையான வழிமுறையா?.

தவறவிடாதீர்

'நீதிபதிக்கு மீதம் இருப்பதே மரியாதை ஒன்றுதான்': பாலியல் புகார் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோகய் வேதனை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தன்மீதான புகாரை விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருந்தது குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், விரிந்தா குரோவர் ஆகியோர் வியப்பும், அதிர்ச்சியும் தெரிவித்துள்ளார்கள்.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் , கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்ததாகக் கூறி இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பாலியல் அத்துமீறல் புகார்களை தெரிவித்துள்ளார். இந்தப் புகார்களை உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கும், அந்தப் பெண் பிரமாணப் பத்திரமாக அனுப்பினார். கடந்த அக்டோபரில்தான் கோகோய் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து அந்தபுகாரை விசாரிக்க நேற்று உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகய், , நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை, அதேசமயம் புகாரை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட பெண், முறைகேடு புகார் ஒன்றில் சிக்கியதையடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டவர். அதுதொடர்பாக தில்லி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு அமர்வில் தலைமை நீதிபதி இருந்தது குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை தலைமை நீதிபதி மீதுபாலியல் புகார் வந்துள்ள நிலையில், அந்தபுகாரை விசாரிக்கும் அமர்வில் நிச்சயம் அவர் இடம் பெற்றிருக்கக்கூடாது " எனத் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் விரிந்தா குரோவர் கூறுகையில், " தன் மீதான குற்றச்சாட்டு குறித்து வரும்போது, அதில் தொடர்புடையவர் அடிப்படை நியாயம், விதிகளின்படி விசாரிக்கும் அமர்வில் இடம் பெற்றிருக்கக் கூடாது. இதுபோன்ற வழக்குகளில் குறிப்பாக பாலியல் தொந்தரவு வழக்கு, நாட்டின் நீதித்துறையில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்கும், மிரட்டலுக்கும் ஆளாகும்போது, நீதித்துறையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாகிறது. நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை, புகார் அளித்த பெண்ணின் நீதி பெறும் உரிமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த அமர்வில் தலைமை நீதிபதி இடம் பெற்றிருக்கக் கூடாது.

இதில் முக்கியமாக, இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய தலைமை நீதிபதி தன்னை பாதுகாக்கும் நோக்கில், புகார் அளித்த பெண்ணின் உண்மைத்தன்மையையும், நம்பகத்தன்மையும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவில் தலைமைநீதிபதியின் பெயர் இடம் பெறவில்லை. வழக்கமாக உத்தரவு பிறப்பிக்கும்போது நீதிபதி கையொப்பம் இடுவார் இதில் கையொப்பமே இல்லை. இதன் மூலம், தலைமை நீதிபதிக்கு எதிராக எந்தவிதமான பாலியல் புகாரையும் விசாரிக்க முறையான நடைமுறையில்லை என்பது தெரிகிறது.

இந்த விஷயத்தில் ஏராளமான வெளிப்படையான இடைவெளி இருக்கிறது. புகார் அளித்த முன்னாள் நீதிமன்ற ஊழியர் புகார் தெரிவிக்க முறையான நம்பக்கத்தன்மையான செயல்பாட்டு முறை இல்லை. அதனால்தான் வேறுவழியின்றி அனைத்து நீதிபதிகளுக்கும் தனது புகாரை அனுப்பி, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக் கோரியுள்ளார். தலைமை நீதிபதி தவறான நடத்தை புகாரில் சிக்கினால், அது தொடர்பாக விசாரிக்க முறையான அமைப்பு இல்லை " எனத் தெரிவித்தார்.

பொதுவாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை விசாரிக்க முறையான வழிகள் இருக்கின்றன, அந்த புகார்கள் உண்மையானவே என்று தலைமை நீதிபதியே கூட விசாரிக்க முடியும். ஆனால், தலைமை நீதிபதிக்கு எதிராக இதுபோன்ற புகார்கள் வந்தால் யார் விசாரிப்பது என்ற தெளிவான வரையரை இல்லை.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக பாலியல் புகார் எழும்போது, அது குறித்த சிறப்புவிசாரணைக் குழுவைக்கூ தலைமை நீதிபதியேதான் அமைக்கிறார்.
-----------
கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

எழுதியவர் : (21-Apr-19, 5:02 pm)
பார்வை : 7

மேலே