மெரினா கடற்கரை பேசுகிறேன்

மெரினா கடற்கரை பேசுகிறேன்

காற்று வாங்க வந்தவர்
காற்றை கவி பாட வந்தவர்
காதல் மொழி பேச வந்தவர்
காதலை காவியம் ஆக்கியவர்
பொய் காதலால் கற்பை இழந்தவர்
பொருட்கள் வியாபாரம் செய்தவர்
உடலையே விலைக்கு விற்றவர்
உடற்பயிற்சி பழகி நோயை துரத்தியர்
வாய்க்கு வந்தபடி வம்புக்கு ஊர் கதை பேசும்வர்
வாய்பேசாமல் அமைதியாக அமர்ந்துருப்பவர்
ஒன்றாக கூடி பாடம் படிப்பவர்
ஒரு வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சுண்டல் விற்கும் சிறுவர்கள் பலர்
அலைகளில் நின்று ஆர்பரிப்பவர்கள்
அலைகளை தூரம் நின்று அமைதியாக ரசிப்பவர்கள்
இவ்வளவு நடக்கிறது
நமக்கன்ன மனக்கவலை என்று
கிடைத்த வாய்ப்பை
படகுகளின் மறைவில் கள்ள காதல்
செய்யும் விட்டல் பூச்சிகள் சிலர் .

காதலர்களின் சொர்க்கம்
கவிஞர்களின் கற்பனை களஞ்சியம்
குடும்பங்களின் மகிழ்ச்சி கொண்டாட்டம்
நண்பர்களின் ஆணந்த சங்கமம்
அறிவாளிகள் அறிவியல் கூடம்
அரசியல்வாதிகளின் கல்லறை
நல்ல தலைவர்களின் சிலை
குழந்தைகளின் குதூகலம்
திறந்த வெளி கட்டணமில்லா உடற்பயிற்சி கூடம் நான்.
- பாலு.

எழுதியவர் : பாலு (21-Apr-19, 8:13 pm)
சேர்த்தது : balu
பார்வை : 165

மேலே