418 பெற்றவை கொண்டு மனநிறைதல் பேரின்பம் - பொருளாசை ஒழித்தல் 14

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பறவையும் விலங்கும் தீனி
= பசித்தபின் தேடு நாளைக்
குறையெனுங் கவலை யில்லை
= உணவின்றி யிறந்த தில்லை
வறியரெம் மிற்பல் லோரிவ்
= வையகத் துளர்தே வீந்த
சிறிதுமே பெரிதென் றெண்ணிச்
= சிந்தையே மகிழ்ந்து கொள்ளே. 14

- பொருளாசை ஒழித்தல் 14
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”உள்ளமே! பறவையும் விலங்கும் பசித்தபின் இரையைத் தேடும். நாளைக்கு வேண்டுமே என்ற கவலையில்லை. தீனி இன்றி அவையும் இறந்து போகவில்லை.

இவ்வுலகத்துள் நம்மைக் காட்டிலும் ஏழைகள் பலர் இருக்கின்றனர். அதனால், கடவுள் கொடுத்த சிறு பொருளைப் பெரிதென்று நினைத்து மனம் மகிழ்ந்து கொள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.

தே-தெய்வம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-19, 8:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே