திறமை வளர்த்திடு

சின்னப் பெண்ணே அழவேண்டாம்
சீறிப் பாய்ந்திடு கொடுமைகண்டு,
அன்னை தந்தை தனைப்போல
அருந்துணை யாரும் இல்லையம்மா,
உன்னை நெருங்கும் அனைவரையும்
ஒன்றா யெண்ணி நம்பிடாதே,
தன்னைக் காத்துக் கொண்டிடவே
திறமை வளர்த்திடு தீயெனவே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (22-Apr-19, 6:54 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thiramai valarthidu
பார்வை : 81

மேலே