உனக்காக

ஏது செய்வேன், இன்பவள்ளியே,
நிலவொளியில், நதிக்கரையில்,
விரல்களில் சுமந்து வேண்டுமரை நடக்கிறேன்,
மயிலிறகே மிதக்கிறாயா,
மேகம் பிடித்து மெல்லிய ஆடை தைக்கிறேன்,
அணிகிறாயா, விண்மீன்கள் கோர்க்கிறேன்,
தங்கமே பூக்களாய் சூடிக் கொள்கிறாயா,
கண்ணில் கரைந்து, இதயம் நுழைந்து,
என்னில் உன்னை பார்க்கிறாயா.

அழகியே ஆயிரமாண்டுகள் ஆண்டவரிடம் கேட்கிறேன்,
இன்றுப் போலவே வாழ வரமும் வாங்குகிறேன்,
வான் போல் வாழ்ந்து பார்ப்போமா,
தென்றல் சேமித்து, இன்பம் தெவிட்டாத
தேசம் நிறுவுகிறேன், ஸ்ரீதேவியே
இருவர் மட்டும் வாழ்ந்து பார்ப்போமா,
என்னுள்ளம் தந்தேன்,
என்னைத் தந்தேன்,
உயிரும் தருவேன் - நான் நீயம்மா.

எழுதியவர் : ஜே.பெலிக்ஸ் ஜேசுதாஸ் (22-Apr-19, 10:22 am)
சேர்த்தது : Felix Jesudoss
Tanglish : unakaaga
பார்வை : 531

மேலே