கவிஞர்கள் போற்றும் காதல்வசந்தங்களே


மூடிக்கிடக்கும் மொட்டுக்களே
----அவள் வருகிறாள்
கொஞ்சம் இதழ் விரித்து மலருங்களேன் !

மலையில் வீசும் தென்றல்களே
----அவள் வருகிறாள்
கொஞ்சம் தரையில் வந்தும் வீசுங்களேன் !

விரிந்து மலர்ந்த பூக்களே
----அவள் வருகிறாள்
தரையில் உதிராமல் சிரித்திருங்களேன் !


நீண்டு விரிந்த நீலவானங்களே
----அவள் வருகிறாள்
நிலவைச் சற்று விரைந்து அனுப்புங்களேன் !

கவிஞர்கள் போற்றும் காதல்வசந்தங்களே
----அவள் வருகிறாள்
எங்களுடனே நிரந்தரமாய் தங்கிவிடுகளேன் !

ஓ ----மூடிக் கிடக்கும் மொட்டுக்களே ---------மீண்டும் படியுங்கள்
குறைந்தது மூன்று முறை நோ அப்பர் லிமிட் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Apr-19, 6:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 41

மேலே