தேவை நீ என காதலை சொன்னால்

பெரியதிலும் பெரியதான உள்ளக் கிளர்ச்சி
குமிழ் குமிழாய் குருதி கொப்பளிப்பு இருதயத்தில்
குண்டு முகம் கருவண்டு கண்கள் முந்திரி பழ இதழ்
வார்த்து ஊற்றி செதுக்கி எடுத்தாற்போல் தேகம்

பரிதி எழுமுன்னே பார்க்க அவள் வீட்டின் முன் நான்
துணிவு எழவில்லை என் உள்ள நிலையைச் சொல்ல
அவளின் பின்னால் தினம் அரணாய் தொடர்ந்தேன்
அவ்வளவு அழகு அவளின் கருமையான நிழலும்

கதிரவன் என் மேல் கடும் பனி பொழிவதைப் போல்
சுடுமணலில் அமர்ந்து குதுகலித்திருந்தேன் அவள் நினைவில்
தேரில் ஏறி வான் வெளியில் மிதப்பதைப் போல் மனம்
தேவதையிடம் தேவை நீ என காதலை சொன்னால்

போ என்று சொல்லி டேய் என திட்டுவாளோ என பயம்
தோதான நாள் வரையில் இந்த தேனான நிலை தொடரட்டும்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (25-Apr-19, 10:19 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 320

மேலே