காகிதப்பூவும் நிஜப்பூவும்

காகிதப்பூ நிஜப்பூவைப் பார்த்து சிரித்தது
காலையில் பூவே நீ பேரழகியாய் மணம்பரப்பி
எல்லோர் மனதையும் கொள்ளைக்கொண்டாய்
இதோ இப்போது இரவு நீ முழுவதும் வாடி
மென்மையும் போய் மணமும்போய் வாடிய
மலராய் உதிர்ந்துவிட்டாய்- என்னைப்பார்
எப்போதும்போல் இப்போதும் அழகு குறையாது
இருக்கிறேனே என்றது.... அதற்க்கு உதிர்ந்த
மலர் சொன்னது; 'கொஞ்சம் பொழுது வாழ்ந்தாலும்
அழகோடு, வாசமோடு மென்மையோடு நான்
வாழ்ந்த அந்த பொழுதே போதும்' உனக்கு அது
கிடைப்பது எப்போது? சொல்லு என்று கூறி
முழுவதுமாய் வாடியது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Apr-19, 9:37 pm)
பார்வை : 67

மேலே