தமிழன்

போற்றப்பட வேண்டியவன் அவன்
இங்கே அடிமை படுத்தப்பட்டு விட்டான்..

வரலாற்றை படைத்தவன் அவன்
அவன் வரலாறுகள் என்னவோ
கரையான்களுக்கு ஓலைகளாய் போனது..

வீரத்தை விதைத்தவன் அவன்
கைகள் கட்டப்பட்ட நிலையில் குனிந்து நடக்கிறான்..

சாதிக்கப் பிறந்தவன் அவன்
தொலைக்காட்சியை பார்த்து வெட்டி கதைகள் பேசி
பொழுதுகளை கழிக்கப் பழகிவிட்டான்...

விடியல் இல்லையோ என ஏங்கினார்..
சிறு தீக்குச்சியாய் முளைத்தான் அவன்
உலகை திரும்பி பார்க்க வைத்தான்..
நினைத்ததை முடித்து ஜல்லிக்கட்டு நடத்தினான்...
விளையாட்டுகளில் மணிமகுடம் சூட்டிக்கொண்டான்
கை விலங்குகளை அவிழ்த்து
பிறர் வாழ வழிகள் செய்தான்

விடியலுக்கு தீக்குச்சி போதவில்லை போம்
தன் மண்ணிலேயே ஒதுக்கப்பட்டான்..

மீதேன்களின் புண்ணிய பூமியாய்
காப்பர்களின் சுவர்கமாய்
அரசியல்வாதிகளின் வகைப்படுத்துதலுக்கு ஒரு காட்சி பொருளாய்
மாறிப்போனது அவனும் அவன் பூமியும்

வருவான் மீண்டும் எழுந்து
இம்முறை தீக்குச்சி அல்ல தீப்பந்தமாய்
வருவான் என் தமிழன்

அன்று இந்தியா மட்டும் அல்ல உலகமே வியக்கும்
தமிழனை பிறக்க வேண்டும் என என்னும் வண்ணம்
வாழ்வான்
இந்தியாவின் சிறந்த மாநிலமாய்

எழுதியவர் : (26-Apr-19, 11:31 pm)
சேர்த்தது : rathika
Tanglish : thamizhan
பார்வை : 66

மேலே