பாரதிதாசனாருக்கு அன்னையின் தாலாட்டு

கண்ணுறங்கும்
என் அழகா
நாவில்
பண்ணுறங்கும்
விண் அழகா

பாரதிக்கு
பின் அழகா
நா ரதிபோல்
கண் அழகா

ஒருநாள்
உன்னால்
ஆகும் பார்
புதுவையின்
மண் அழகா

என் அங்கத்தில்
பிறக்காது
தமிழ்ச் சங்கத்தில்
பிறந்தவனே

இங்கீதம்
தெரியாதோர்
மனதையும்
சங்கீதமாய்த்
துறந்தவனே

கம்பன் நாவுக்குள்
வைத்ததை
கமலம் பூவுக்குள்
வைத்ததைத்
தன் பாவுக்குள்
வைத்தவனே

நன் நூல் கொண்டு
தக்க இயலா
தமிழனின் நெஞ்சை
பண் நூல்கொண்டுத்
தைத்தவனே

பெண்ணடிமை
செய்வோரை
வதைத்தவனே
குடும்ப விளக்கு ஏற்றி
புதுவையில்
புது வெய்யில்
விதைத்தவனே

புதுச்சேரி
உன் கவியால்
ஆனதடா
கவி மதுச்சேரி

வாயில்
பல்முத்து காணாது
சொல்முத்து
கண்டவனே

சமூகத்தைத்
கொல்லும் கைக்குப்
பாட்டெழுதாது
கொள்கைக்குப்
பாட்டெழுது

ஏட்டைக் கொண்டு
தமிழ்மீது படிந்த
கரை ஏட்டை நீக்கு

புது மை
கொண்டு
புதுமை எழுது

அன்னைத்
தமிழுக்கு நேசானாய் இரு
அண்ணன்
பாரதிக்கு தாசனாய் இரு

எழுதியவர் : புதுவைக் குமார் (28-Apr-19, 12:15 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 39

மேலே