மண்ணில் உலாவும் விண்ணகத் தேவதை

மண்ணிலே பெண்ணனெ உரு எடுத்து
கன்னியென உலா வரும் தேவதையே
பெண்ணியம் போற்றும் தமிழ் மகளே
தமிழர் உடை காத்து விடு என் மகளே.../

சரிகை தாவணி உடுத்தி உச்சி பொட்டிட்டு நேர் உச்சி எடுத்து சடை போட்டு சரமிட்ட பூ சூடி நாணம் கொண்டு நீ நடக்கையிலே நாணி விடும் காணும் காளை மகன் கண் அல்லவோ.../

விண்ணுலக தேவதைகள் என்னழகடி பெண்ணே.
மண்ணில் உலாவும் உன் அழகு பெருமையடி.
கெண்டைக்கால் மறைய நீ உடை உடுத்தி கண்ட இடம் காட்டாமல் நடை பயின்றால் இந்திரலோகத்து மந்திரிக்கும் புத்தி மங்கிப் போகுமடி பெண்ணே..../

மஞ்சள் இட்ட முகத்துடன் நீர் சொட்டும்
கூந்தலுடன் நீ கோலம் போடையிலே
நீர் எடுக்க வரும் மேகமும் மயங்கித்தான் போகுமடி மண் உலக தேவதை உன் போல்
அழகு விண்ணில் உண்டா -?
விண்ணை விட்டு மண் ஆள வந்த
தேவதை நீயடி என் மகளே .../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (28-Apr-19, 1:56 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 106

மேலே