இமயம் ஏறலாம்

இமயம் ஏறலாம் !


எழுந்து வா எழுந்து வா
துணிந்து வா
மாற்றங்கள் நாம் செய்யலாம்!

பணிந்து வா பணிந்து வா
புரிந்து கொள்
ஏற்றங்கள் நாம் கொள்ளலாம் !

அறிந்து வா அறிந்து வா
தெரிந்து கொள்
ஆக்கங்கள் நாம் செய்யலாம் !

நிமிர்ந்து நில் நிமிர்ந்து நில்
துணிந்து செய்
வெற்றிதனை நாம் காணலாம் !

கனவு காண் கனவு காண்
முயற்சி செய் - நிச்சயம்
ஓர் நாள் வெல்லலாம் !

முயற்சி செய் முயற்சி செய்
பயிற்சி கொள்
இமயம்கூட நீ ஏறலாம்!

இவன் மு. ஏழுமலை
9789913933

எழுதியவர் : மு. ஏழுமலை (30-Apr-19, 4:37 pm)
சேர்த்தது : மு ஏழுமலை
Tanglish : imayam eralamm
பார்வை : 49

மேலே