முதல் காதல்

அந்திநேர மேக கூட்டம்
அழைத்து வந்த
அழகு தேவதையே...
சிந்தும் மழையோடு
சின்ன பார்வையை வீசி
மெய் சிலிர்க்க வைக்காதே!!

கோடை சாரலாக
கொஞ்சம் சிதறும் நீயும்!
மீண்டும் அதையே
கெஞ்சி கேட்டும் நானும்!!
ஒன்று சேரும் வரை
அன்பு நீடிக்குமா -- அதை இந்த
உலகம் தான் துண்டிக்குமா...

உடல்களை மட்டுமே பார்க்கும்
உலகத்திற்கும் அதற்கு
உறுதுணையாக இருக்கும்
கடவுளுக்கும் -- நம் உள்ளங்கள்
எப்போதும் பிரியாதென்று
எடுத்துச் செல்ல யாருமில்லை!!

சேர விடாமலும்
வாழ முடியாமலும்
நாம் படும் துன்பம்
ஒருநாளில் மாறும் இன்பமாக
அதுவரை இருப்போம் தூரமாக...

தூரமாக இருக்கும் நாட்களை
நெஞ்சோரம் பாரமாக வைக்காதே
பாழாய் போன உலகம்
பாமரர்கள் என்பதாலே நம்மை
பார்த்து சிரிக்கும்

பார்த்து மட்டுமே சிரிக்கும்
உலகத்திற்கு தெரியாது
பூமியில் நாம் உதித்த காரணம்

வாசல் திறந்தும்
வழி இல்லாமல் இருக்கிறோம்!
வார்த்தைகள் இருந்தும்
சொல்லாமல் இருக்கிறோம்!!
இந்த நிலையை எடுத்து சொல்ல
நான் எந்த கலையை
புதிதாய் தேடுவது...

சொந்த கதையை சொல்ல
சொற்களை அழைத்தால்
இது சோதனையென்று
நெருங்கி வராமலே
நெஞ்சத்தை எரிக்கிறது...

உணர்வுகளை
உறவுகளிடம் சொல்லலாமென்றால்
உனக்கு தகுது இல்லையென்று
தாழ்த்தி விடுகிறார்கள்!!
தாங்காத இந்த தனிமைக்கு
தூங்காமல் இருப்பதை தவிர
வேறு என்ன தெரியும்...

சித்திரை இரவிலும்
நித்திரை இன்றி வாழ்கிறேன்!
உன்னை மட்டுமே கேட்கும்
கனவோடு தேய்கிறேன்!!

விடிந்தால் என்ன
விழித்தால் என்ன
எனக்கு விடைச் சொல்ல மறுக்கிறது
உந்தன் பிம்பம்...

கசப்பாய் வாழ்க்கை இருந்தாலும்
உன் கண்கள் தானே
எனக்கு இன்பம்

காதல் தோற்றாலும்
இந்த கண்ணியம் தானே
நாம் கண்டெடுத்த வெற்றி

கல்லறையே நிரம்பலாம்
கண்ணீரிலே மூழ்கலாம்
கறைக்க முடியுமா இந்த காவியத்தை...
நீயும் பிரியலாம்
நானும் பிரியலாம்
நெஞ்சை விட்டு பிரியுமா
மூச்சை பங்கிட்டுக்கொண்ட
இந்த முதல் காதலை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (30-Apr-19, 6:44 pm)
Tanglish : muthal kaadhal
பார்வை : 1144

மேலே