என் காதல்💛❤

காதலே!
காதலே!
கண்ணில் வழியும்
காதலே!
என் நெஞ்சில் 
ஒலிக்கும் காதலே!
என் மூச்சை நிறைக்கும்
காதலே!
எவரோ பறித்துச் சென்ற
ரோஜா செண்டு
என்னையும் பார்க்குதே
தள்ளி நின்று
வானம் இடம் மாறி
பொழிந்தாலும்
மழை விழுவதோ
மண்ணில் தான்
கண்கள் கண்ணீர்
வடித்தாலும்
காட்சிகள் என்றும்
கலைவதில்லை
கரையில் தடயம்
கரைந்தாலும்
கரையின் சுவடு
கரைவதில்லை
மேற்கிலே சூரியன்
முளைத்தாலும்
அது மறையாமல்
இருக்க போவதில்லை
என்னை நானே
கடந்தாலும்
உன்னை கடக்க 
முடியவில்லை
உன்னை கடக்க
முயன்றாலே
என் காலில் கூட
வலுவில்லை
எத்தனை துயரம்
வந்த போதும்
உன்னிடம் பேசாமல் போன
நாட்கள் போல வலிக்கவில்லை
காரணம் ஆயிரம் 
இருந்த போதிலும்
நான் சிரிக்க காரணம்
நீயன்றி யாருமில்லை
என்றேனும் உன்னை
பார்த்திடுவேன்
அதுவரை நானும்
காத்திருப்பேன்
கலங்கமில்லா 
என் காதலை 
கனநேரமும்
மறவாமல் நெஞ்சில்
சுமந்திருப்பேன்
கண்ணும் மங்கும்
நாள் வரும்
கன்னத்தில்
வரிகள் ஆயிரம்
அன்றும் உன்னை
மறவேனே
மனதால் உன்னை
சுமப்பேனே
மண்ணில் மடிந்து விழுந்தாலும்
மறுபடியும் உனக்காய்
பிறப்பேனே
உன் மேல் உள்ள காதலை
ஒரு வரியில்
சொல்ல முயல்கிறேன்
என் உயிரே போயினும்
உன் நினைவில்
வாழனும்
என்றே சொல்லி
முடிக்கிறேன்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (30-Apr-19, 6:47 pm)
பார்வை : 114

மேலே