உழைப்பாளர் தினம்

அந்த பெயர்
எங்கோ எப்போதோ உதித்தது...

விளம்பர நோக்கமின்றி
விதையாக விழுந்து
வியாபார நோக்கமின்றி
விருட்சமாக எழுந்தது

எதனிடமிருந்து கற்றுக்கொண்டது
தேக்கம் ஏதுமின்றி
தேனீயாக சுழன்றிட

எதிர்பார்ப்புக்களை
எறும்பின் நட்பு கொண்டு
எளிய செயலாக்கி
உறக்கம் தொலைத்து
உழைத்து களிக்கும்
உழைப்பாளர்களுக்கு ஓர்நாள்...

சிறு சிறு செயல்களிலும்
சின்ன சின்ன பகிர்வுகளிலும்
சிறு குடும்பமதனையும்
சீறிய வழியே
சிறு சிறு உழைப்போடு
சித்திரமாக்கும் சிலம்புகளுக்கும்..
இன்றைய நாள்...
என்றுதான் அர்பணிக்கப்படும்...?

வீட்டடி வேலைகளும்
உழைப்பேயென
உணர்ந்து கொள்ளும்
நாட்கள்தான் எப்போதோ...?

எழுதியவர் : சா.மனுவேந்தன் (30-Apr-19, 8:18 pm)
சேர்த்தது : மனுவேந்தன்
பார்வை : 772

மேலே