தேசியத் தலைவரும் மாநிலத் தலைவரும்

எம் பேரனா கொக்கா?
@@@@@@@@@@@@@
ஏன்டப்பா முனியாண்டி, அந்தத் டிவி பொட்டியப் பேரு. மேடை மேலே நெறையப் பேரு ஒருத்தரு கைய ஒரு பிடிச்சு கையங்களத் தூக்கி நிக்கறாங்க. அவங்க தலைவர்கள்ன்னு சொன்னாங்க. நான் கைநாட்டுக்காரி. நீ ரண்டாம் வகுப்புவரை படிச்சவன். மேடையில நிக்கறவங்கள்ல தேசியத் தலைவர்ன்னெல்லாம் சொல்லறாங்க. அங்க இருக்கறவங்கள்ல யாரு தேசியத் தலைவர்? யாரு மாநிலத் தலைவர்.
நாமட்டும் என்னத்தக் கண்ட பாட்டி. செய்தித்தாள்கூடப் படிக்கத் தெரியாது. ஆடுகளை பட்டியில அடச்சிட்டு வரவே இருட்டிப் போகுது. உடம்பக் கழுவிட்டு இப்பத்தான் களி தின்னுட்டு இருக்கறன். நா அந்த டிவி சனியனைப் பாக்கறதில்லன்னு உனக்கே தெரியும். தேசியத் தலைவர்னா நாடறிஞ்ச தலைவர்னு கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தத் தலைவர்கள்ல ரொம்ப ஒயரமா இருக்கறவரு தேசியத் தலைவரா இருப்பாரு. அவுரு கையப் பிடிச்சிட்டு ஒயரம் கம்மியா இருக்கிறவரு மாநிலத் தலைவரா இருப்பாரு.
@@@@@
ஆமாம்டா முனியாண்டி நீ ரண்டாம் வகுப்புப் படிச்சவன். நீ சொல்லறதுதான்டா சரியா இருக்கும். எம் பேரனா கொக்கா?

எழுதியவர் : மலர் (1-May-19, 4:36 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 71

மேலே