நலமா நங்கை கூந்தலே

நலமா நங்கை கூந்தலே
உலாவந்த தென்றல் எனக்கு
கொடைக் கானல் குளிர்நிழலே
விடைபெற்று வேறிடம் செல்லேன் !

-----வஞ்சி விருத்தம்

நலமா நலமாபூ நங்கையின் கூந்தல்
உலாவந்த தென்றல் எனக்கெழிற்கார் கூந்தல்
கொடைக்கானல் பூந்தோட்ட பூநிழல் அன்றோ
விடைபெற்று வேறிடம்செல் லேன் !

----இன்னிசை வெண்பா

கவிக்குறிப்பு :
கவிப்பிரிய டாக்டர் மலரின் பரிந்துரைப்படி யாப்பின் இரு வடிவங்களில்
நலமா நங்கை கூந்தலே !

எழுதியவர் : கவின் சாரலன் (2-May-19, 11:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே