ஆசியர்கள்
இவர்கள்
நம்மை உயரத்தில் ஏற்றிவிட்ட
ஏணிப்படிகள் - சமுதாயத்தின்
வளர்ச்சித் தூண்களை செதுக்கிய
நவ பாரத சிற்பிகள்!
எழுத்தறிவித்த இறைவண்கள்
அறிவுக் கோவிலில் குடிகொண்ட
வணங்கப்படாத பிரம்மாக்கள் - பாரத நாட்டை
வளர்ச்சிப் பாதையல் அழைத்து செல்லும்
ஞான ஒளிகள் - அறிவுக் கண்ணை திறந்திடும்
சத்திய சுடர்கள்.
புதுப்பாதை காட்டிடும் புரட்சியாளர்கள்!
தங்கலையே தேய்த்துக் கொள்ளும்
சந்தனங்கள்.- நமை வாழவைத்த
தெய்வங்கள் - வாழியவே இந்நாளில்!