பட்டுக்கோட்டைப் பாட்டைப் பிடி

#பட்டுக்கோட்டை பாட்டைப் பிடி

பட்டுகோட்டைப் பாட்டினிலே
கட்டிய கோட்டையடா - அவன்
கெட்டித் தமிழில் கொட்டியதின்று
பட்டித் தொட்டியடா..!

உழைத்துப் பிழைக்கும் வாழ்வினிலே
வெற்றி உறுதியடா - இதை
உரத்துச் சொன்ன உத்தமனன்றோ
பட்டுக் கோட்டையடா..!

வியர்வைத்தன்னை விதைப்பவனுக்கு
உயர்வைக் காட்டுமடா
அன்றே உரைத்தான் என்றும் உண்மை
விதைத்தால் விளைச்சலடா.!

வேப்பமரத்தில் பேய்கள் என்றே
வீரம் முடக்கிடுவார் - இந்த
வெட்டிப்பேச்சை விட்டொழித்தால்
புலியும் எலியுமடா..!
வலது கையென ஆக்கிடு உன்னை
வளரும் உலகமடா
தானே வளரும் உலகம் என்பதை
தகர்த்து எறிந்திடடா..!

கொள்ளையடிப்பதில் வல்லமைதானே
மாறவில்லையடா
திருட்டு உலகை புரட்டி எடுத்தே
இருட்டை விலக்கிடடா.!
தனியுடமை என்றே ஆனது
தரித்திர நாட்டிலடா - மாற்றிப்
பொதுவுடைமை தொண்டுகள் புரிய
உரைத்தார் புறப்படடா..!

மாட்டை விற்றார் மாடும் மேய்த்தார்
மாங்காய் வியாபாரி - பட்டுக்கோட்டை
இட்டிலி விற்றார் முறுக்கும் விற்றார்
தேங்காய் வியாபாரி..!
செய்யும் தொழிலே தெய்வம் கொள்வாய் திறமை செல்வமடா
கையையும் காலும் உழைக்குமென்றால்
கிட்டும் பதவியடா..!

நேர்மை உழைப்பு நம்பிக்கை வளர்த்தார்
நல்லவர் பாட்டிலடா
பட்டுக்கோட்டை பகன்றதைப் பற்ற
கிட்டும் சொர்க்கமடா..!

#சொ. சாந்தி

கே.கே. நகரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பட்டுக்கோட்டை திருமிகு கல்யாண சுந்தரனார் அவர்களின் பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது.

பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கான நடனங்களைப் பள்ளி மாணவ மாணவியர் மற்றும் தமிழ் ஆசிரியர் ஆகியோர் ஆடியது மனத்தைக் கொள்ளையடித்துப் போனது.

இந்த நிகழ்ச்சியில் இருவருக்கு மட்டுமே கவிதை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதில் நானும் ஒருத்தி என்பதில் பெரு மகிழ்ச்சி.

திரு தனஞ்செயன், IAS, அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் திரு பெரியண்ணா அவர்கள் மற்றும் செயலாளர் திரு இதயகீதம் இராமானுஜம் அவர்களின் சொற்பொழிவு அற்புதம்.

திரு பாரதி ராஜா மற்றும் திரு தனஞ்செயன் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்றதில் பேரானந்தம்.

நிகழ்ச்சிக்கு வாருங்கள் என்று அழைப்பினை விடுத்த திரு பிரபாகரன் அவர்கள் வராதது குறித்து வருத்தமே. அவருக்கும் மேற்சொன்ன பள்ளி நிர்வாகத்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!🙏🙏

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 8:49 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 39

மேலே