தேர்தல் சூதாட்டம்

தேர்தல் சூதாட்டம்

ஆரம்புத்துவிட்டது
அடாவடிச் செயல்கள்
முதற்கட்டத் தேர்தல் தில்லுமுல்லு
வேண்டப்பட்டவர் இறந்திருந்தாலும்
இறவாதிருக்கிறார்
வாக்காளர் பட்டியலில்..!

அய்யோ பாவம்..!

ஆகாதோருக்கு
இடமில்லையாம் வாக்களிக்க
தெரிவு செய்து நீக்கப்பட்டிருக்கலாம்
திருட்டு ஆட்சியிலே..!

எஞ்சிய வாக்குகளையாவது
உண்மையுடன் எண்ணிச் சொல்லட்டும்

எங்கள் அண்ணன்
துணை வட்டாட்சியராக இருந்து
தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த
நேரத்தில் நிகழ்ந்தது
இன்றும் பசுமையாக
நினைவில் இருக்கிறது
வேதனை கூட்டுவதுதான்..

பாதுகாப்பில் இருந்த
இயந்திர வாக்குப் பெட்டிகளை
நள்ளிரவில் திருடிக்கொண்டு
ஓடினார்களாம்..

விரட்டிப் பிடித்த நிஜத்தில்
கல கலத்துபோனோம்..
இப்படியும் நடக்குமா??

இப்போதும் நடக்கக்கூடும்
எத்தனை வித அசம்பாவிதங்களும்
வெற்றிபெறும் கொலை வெறியில்
வெட்டுக் குத்தும் நடக்கலாம்
வீணாய்ப் போகலாம் உயிர்கள்..!

ஊடகங்களுக்கு
செலவில்லாமல் செய்திகள்..!

நல்லாட்சிக்காக காத்திருப்போர்
ஏமாளியா…?
கோமாளியா..?
போராளியா…?
சாதித்தவரா..?
போகப்போக புரியவரும்..

அதுவரை
தேர்தல் ஒரு
சூதாட்டம்தான்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 9:05 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : therthal suthaattam
பார்வை : 26

மேலே