கொலையுண்டது மரமொன்று

#கொலையுண்டது மரமொன்று

மரத்தை வெட்டியபோது
உடைந்து சிதறியது
பறவையின்
அடை முட்டைகள்..!

பசியாறிக்கொண்டது
தெரு நாய்கள்..!

இருக்க மரமும் இன்றி
உண்பதற்கு இறையும் இன்றி
சிறகு வலிக்க
பறந்து கொண்டிருக்கிறது
அனைத்தையும்
இழந்த பறவை..!

மரத்தின் கீழ்
இளநீர் விற்றவன்
வேறு இடம் தேடிக்கொண்டிருந்தான்

மரத்தை வெட்டியவனும்
விற்றவனும்
உண்டு களித்துக் கொண்டிருந்தனர்
பிரியாணி...!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (8-May-19, 9:21 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 138

மேலே