மது ஒழிப்பு

பதவி ஆசை எனக்கில்லை
பதவி என்று ஒன்று கிடைத்தால்
நானோ முதல் அமச்சர் ஆனதுமே
முதல் முறை இடும் கையொப்பம்
மது ஒழிப்பு திட்டமாகவே இருக்கும் .../

வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு
விளைவிக்கும் கெட்ட நீரை
இறக்குமதி செய்யும் வனிகத்துக்கு
தடை விதிப்பேன் வீதிக்கு வீதி காளான் போல் முளைத்திருக்கும் மதுக்கடைக்கு
சீல் வைப்பேன் ...../

படிக்கும் பருவத்தில் குடிக்கும்
இளையோரை தண்டிப்பேன் .
குடியால் குடி கெட்டுப் போய்
வாழும் குடிசை
வாசிகளைக் கண்டிப்பேன் /

மது போதையில் மானம்
இழந்து குப்பை தொட்டியில்
குழந்தையை வீசும் பெண்களை
அடையாளம் கண்டால் ஈவுஇரக்கம்
இன்றி சிறை பிடிப்பேன் மது
ஒழிப்பு திட்டத்தை நாடு எங்கும்
பறைசாற்றுவேன் ..../

(என்றோ எழுதியவை )

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (8-May-19, 9:57 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : mathu ozhippu
பார்வை : 106

மேலே