என் வீட்டுக்கார்

என் வீட்டுக்கார். 😘

மூட்டை தூக்கும்
மா மனிதன் என் வீட்டுக்கார்.
உழைப்புக்கு சலிக்காத அஞ்சாத சிங்கம் என் வீட்டுக்கார்.

முரட்டு உருவம்
கரடுமுரடான பேச்சு
அசகாயசூரன்
எப்போதும் மெய் பேசும் அவர் பொய் அறியாதவர்
என் வீட்டுக்கார்.

களைப்பு தீர குவாட்டர்
அதிகமாக காசு இருந்தா பிரியாணி
பணம் இருந்தாலும் இல்லை என்றாலும்
கனகாம்பரம் அல்லது மல்லிபூ வாங்கிவரும் என் உயிர்
என் வீட்டுக்கார்.

என் தலையில் அவரே பூ வைத்து
பிரியாணி அவரே எனக்கு ஊட்டி விடும்
என் தாய் என் வீட்டுக்கார்.

எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
அவரே எனக்கு கணவராக வர
எல்லாம் வல்ல இறைவனை வேண்டும்
அந்த பாசகாரரின் அன்பு மனைவி.

- பாலு.

எழுதியவர் : பாலு (10-May-19, 3:44 pm)
சேர்த்தது : balu
பார்வை : 184

மேலே