தாலாட்டி வாழ்கின்றேனே தாயே

மாசற்ற மனம் கொண்ட தாயே
பாசமாய் தேன் பொழியும் அமுதே
உந்தன் நிழலிலே வாழவைக்கும் கருணையே
ஆடம்பரம் எதுவும் வேண்டாமே
உன் அக்கறையே போதுமே
தடை இன்றி வாழ்ந்திடுவேனே
தாயே நீயும் எந்தன் பக்கமாய்
அன்பு மருந்தை தெளிப்பதால்
உயிராக உறவாக வையகத்தில்
தாலாட்டி வாழ்கின்றேனே

அகிலன் ராஜா

எழுதியவர் : அகிலன் ராஜா (12-May-19, 11:01 am)
பார்வை : 349

மேலே