மரநிழலில் கண்மூடி அமர்ந்தான்

மரநிழலில்
கண்மூடி மௌனத்தில் அமர்ந்தான்
ஞானம் வரவில்லை !
நதிக் கரையில்
கண்மூடி மௌனத்தில் அமர்ந்தான்
ஞானம் வரவில்லை !
மலை முகட்டில்
கண்மூடி மௌனத்தில் அமர்ந்தான்
ஞானம் வரவில்லை !
மலைக்குகையில்
கண்மூடி மௌனத்தில் அமர்ந்தான்
ஞானம் வரவில்லை !

மனம் உலக வீதியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தால்
தரு நிழலானால் என்ன மலை முகடானால் என்ன வருமோ ஞானம் மூடா ?

குரல் கேட்டு கண் விழித்தான்
குறடுகளின் ஒலி கேட்க காவி போர்த்தியவன் ஒருவன் போய்க்கொண்டிருந்தான் !

மலை உச்சியில் நிற்கவோ மலை அடிவாரத்திற்கு பயணிக்கவோ
என்று பரிதவித்து நின்றது
போவோன் பின் போவோம் என்று தெரியாத ஏழை ஆத்துமா !

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-19, 9:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 93

மேலே