மனம் நாடுதே

மலைகளில் இறை உண்டு மனம் நாடுதே!
சிலை இன்றி சிகரமாய் காட்சி காட்டுதே!
கலை உண்டு .. கானம் உண்டு -நம்
நிலை உணர்த்தும் சூழல் உண்டு ..

ககனத்தில் வளம் வரும் சித்தரும்
மௌனத்தை விரும்பிடும் பக்தரும்
மோகத்தை வென்றிட போகியும்
தினம் நாடும் மலை உண்டு..மனம் நாடுதே!

ஓர் அறிவும் அங்கு பாடம் சொல்லுதே
ஓயாத மனதுக்கு பாதை சொல்லுதே
கார் உண்டு நீர் உண்டு சீர் உண்டு
சிந்தனைக்கு நல்ல செறிவுண்டு...மனம் நாடுதே!

எழுதியவர் : வெங்கடேசன் (13-May-19, 11:07 am)
சேர்த்தது : வெங்கடேசன்
பார்வை : 356
மேலே