மூன்றெழுத்து மந்திரம் அம்மா

திருமாலை அழைக்க அஷ்டாக்ஷர மந்திரம்,
ஈசன் அருளுக்கு பஞ்சாக்ஷர மந்திரம்
என்ற இம்மந்திரங்களை நாம் ஓதி
அருள்பெற ஞான குரு தேடி நாடவேண்டும்

ஆனால் 'அம்மா என்ற மூன்றெழுத்து
மந்திரம் பாமரனும் ஓதலாம் குரு யாருமின்றியே
ஓதின அத்தருணத்திலே உந்தன்
நியாய கோரிக்கைகளைத் தீர்த்துவைப்பாள்
'அம்மா;'
கலியுகத்தில் தெய்வம் அவள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (13-May-19, 12:15 pm)
பார்வை : 75

மேலே