தோற்றது

பாசபிணைப்பில்
கட்டுண்ட இதயம்

காதல் என்றே
நுழைந்த உன்னையும்

ஏற்றுக் கொண்டது
எளிதாக

போராட்டத்தில்

மாட்டிக் கொண்டது
வலுவாக

காதலும் தோற்றது
பாசமும் தோற்றது

நிலைநிறுத்திக்
கொண்டது

தன் வரலாறை
காதல்..,

எழுதியவர் : நா.சேகர் (13-May-19, 11:33 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thotrathu
பார்வை : 353

மேலே