வெள்ளிக் கொலுசுமணி

வெள்ளிக் கொலுசுமணி
****************************************************

வெள்ளிமணி க்கொலுசு அணிந்திட்ட கால்கள்
துள்ளிக் குதிக்கையில் ஒலித்திடும் ஜதிஒலிகள்
முல்லைபூச் சரம்போல அமைந்திட்ட பல்வரிசை
பள்ளம்விழு கன்னங்கள் சேலத்து மாங்கதுப்பு
கள்வடியும் இதழ்களிடை முத்துதிரும் புன்னகை
முளைதயிர் பிசைந்ததன்ன காந்தள் மெல்விரல்கள்
சிலையொத்த தோள்களிடை களையான கனியகங்கள்
இலைவாழை நாபி குடக்கழுத்துச் சின்னயிடை
கேள்விக்குறி யதுபோல அழகான இருசெவிகள்
எள்ளுப்பூ சிறுநாசி கெண்டைவிழி நயனங்கள்
வில்லொத்த புருவமிடை திலகமிட்ட சீர்நுதல்
நூல்வார்த்த சேலையுடன் நடந்துநீ வருகையிலே
துள்ளிவரும் ஆனந்தம் எல்லையதற் கில்லையடி!

எழுதியவர் : சக்கரைவாசன் (15-May-19, 9:36 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 72

மேலே