கண்ணீர்

காதல் வந்து என்னை

முடிவெடுக்க வைத்தது

காதல் என்னை ரசிக்க
வைத்தது

காதல் என்னை காக்க
வைத்தது

காதல் என்னை பேச
வைத்தது

காதல் என்னை கனவில்
வைத்தது

காதல் என்னை எதிர்க்க
வைத்தது

எல்லாம் சொல்லித் தந்த
காதல்

உன்னை அழவும்
வைப்பேன் என்று

சொல்லவேயில்லை

அதையும் செய்தது இன்று
அழுதபடி

நான் காதலுக்காக

எழுதியவர் : நா.சேகர் (15-May-19, 3:20 pm)
Tanglish : kanneer
பார்வை : 463
மேலே