காத்திருந்தாள்

நீ தீட்டிய மையினால்
நீல வானம் முழுதும்
கருமை ஆனது !!!!!
இருள் கொண்ட வானில்
விண்மீன் மிதந்திட ---
மழையை எண்ணி மயிலும்
மனதை எண்ணி மானும்
காத்திருந்தது கரையோரம் !!!!
தேடலில் திரியும் அவள் கண்கள்
தேனாய் சிந்தியது நீரை !-!
நெஞ்சம் திகைத்திட
அருகே சென்றேன்
அருகில் அவள் வந்து-என்
சிவந்த உதட்டின் சிறையிலிருந்து
விடுவித்தால் உதிரத்தை...............

எழுதியவர் : கவிமாணவன் (15-May-19, 5:38 pm)
சேர்த்தது : Kavimanavan
Tanglish : kathirunthaal
பார்வை : 192

மேலே