போலி துறவறம்

ஏன்டா மகனே துறவு வாழ்க்கையை ஏற்கப் போறதா சொல்லற? ஏழு தலைமுறைக்கு வேண்டிய சொத்து, பணம், வருமானம் நமக்கு இருக்கும்போது துறவு வாழ்க்கை உனக்குத் தேவையா?
@@@@@
அப்பா இது கலியுகம். உண்மையான துறவறத்திற்கு ஏற்ற காலம் இது அல்ல. சகல வசதிகளோட சுகபோக வாழ்க்கை வாழவேண்டும்னா குடும்ப வாழ்க்கை சரிப்படாது. நித்தி போன்ற துறவிகள் வாழும் வாழ்க்கை எனக்கு பிடித்திருக்குது. அவருக்கு உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான சீடர்கள். கோடிக்கணக்கில் சொத்து. நினைத்ததை அடைபவர். ஜாலியான வாழ்க்கை. இந்த வாழ்க்கைதான் எனக்கு வேணும்.
@@@@
திடீர்னு எப்பிடிடா மகனே நீ துறவி ஆகமுடியும்.
@@@@@
அப்பா எனக்கு இருபது இலட்சம் குடுங்க. ஒரே வருசத்தில் அதை இருநூறு கோடியாப் பெருக்கிக் காட்டறேன்.
@@@@
ஏன்டா இது சாத்தியமா?
@@@@@
அப்பா, படிச்ச வேலை வெட்டி இல்லாத பயல்களை என் சீடர்களா பணியில் அமர்த்துவேன். அவர்களுக்கு சீருடை உண்டு. அவர்கள் ஊர்தோறும் போயி 'ஶ்ரீலஶ்ரீ சத்தியானந்தா சாமிகள் உங்கள் ஊருக்கு வருகை தர உள்ளார் விரைவில். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் அவர் உங்களை தொட்டு அருளாசி வழங்கியவுடன் மாயமாகிவிடும்'ன்னு சுவரொட்டிகளைத் தயாரித்து அந்தந்த ஊர்களின் தெருக்கள் எல்லாம் ஒட்டுவார்கள். அந்த வண்ணச் சுவரொட்டிகளில் நான் சிரிக்கும் படம் பெரிய அளவில் அச்சாகும். நான் அருளாசி வழங்கச் செல்லும் ஒவ்வோரு ஊரிலும் ஆயிரம் பேரைத் தேர்வு செய்வார்கள் என் வேலைக்கார சீடர்கள். அவர்களுக்கு அன்றைய கூலி ஆயிரம் ரூபாய். அவர்கள் என் தரிசனம் பெறும்போது அவர்களை நான் தொட்டதும் என் காலில் விழுந்து வணங்கிவிட்டு அவரவர் வீட்டுக்குப் போயி ஶ்ரீலஶ்ரீ சத்தியானந்தா சாமிகளின் மகிமை பற்றி அவர்கள் பகுதியில் என் சீடர்கள் சொல்லிக்குடுத்தபடி பிரச்சாரம் செய்வார்கள். ஆறே மாசத்தில ஆயிரக்கணக்கானவர்கள் என் பக்தர்கள் ஆகிடுவா. அப்பறம் நான் உலகறிந்த துறவி ஆகிடுவேன். இளம் சீடர்கள் சீடிகள் என் ஆசிரமத்தில் தங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை என்னோடு வாழ்வார்கள். என் கவர்ச்சியான பேச்சால் நாளுக்கு நாள் என் பக்தர்கள் பெருகுவார்கள். வெளிநாட்டு பக்தர்களும் ஆயிரக்கணவர்கள் இருப்பார்கள். பக்தர்களின் தட்சணை கோடிக்கணக்கில் கொட்டும். எனக்கு வாழ்நாள் முடிய சுகபோக வாழ்க்கை தான். துறவியான நான் பெரிய அரசியல் பதவி அடையவும் வாய்ப்பு இருக்கு.
@@@@@
சாமி நீங்க என் மகன் அல்ல. எனது குரு. உங்கள் ஆசிரமத்திற்கு உங்களை பெற்ற நாங்களும் வந்து தங்கிடுவோம்.
@@@@
நலம் உண்டாகட்டும் பக்தா.

எழுதியவர் : மலர் (16-May-19, 8:59 am)
சேர்த்தது : மலர்1991 -
Tanglish : poli thuravaram
பார்வை : 88

மேலே