சேதி கேளு

இரையைத் தேடிய பறவையெல்லாம்
இணைந்தே ஒன்றாய்ப் பறக்கின்றன,
இரையைத் தேடிடும் போட்டியிலே
இங்குள மனிதனுக் கொழுங்கில்லை,
திரையின் மறைவிலே ஒளிந்தேதான்
தீமை செய்வான் இனத்துக்கே,
உரைத்திட சேதி ஒன்றுண்டு
ஒற்றுமை கற்றிடு அவற்றிடமே...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (16-May-19, 7:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 73

மேலே