காதல் வலி 69

கவிஞர்கள் சங்கமம்

கனவில் வந்த
காந்தமலர்

நீ மழை
நான் மயில்
நீ வரும்
நேரம் நான் அறிவேன்
மகிழ்வில் நடனம் புரிவேன்

நீ தேர்
நான் கொடி
பாரி வந்தால்
படர்வேன்
அவன் வரும்வரை
உன்னைப் பின்தொடர்வேன்

நீ சூரியன்
நான் பூமி
சுற்றிவருகிறேன்
உன் அண்ணன்
என்ன நிலாவா
என்னை ஏன் சுற்றி வருகிறான்

நீ ஆறு
நான் விவசாய
நிலத்தின் சேறு

உன்னிடம் இருந்து
எப்போது வரும்
காதல் எனும் நீரு
இந்த
ஏழைக்குக்
கிடைக்குமா சோறு

அன்பே நீ கூறு
எதையும் பேசாமல்
என் இதயத்தைப்
போடாதே கூறு

கடைக்கண்ணால்
ஒரு முறை பாரு
நீ மறுத்தால்
நடக்கும்
மூன்றாம் உலகப் போரு

நான் உன் உயிரின்
வேரு
இதைவிட நான்
என்ன சொல்ல வேறு

நம் காதலைத் தீட்டு கூரு
உங்க அப்பாகிட்ட
என்னைப் பற்றி கூறு

மறுத்தால்
அவர் சொல்ல மீறு
மீறாமல்
என் தயிர் மனத்தைக்
கடைந்து எடுக்காத மோரு

அழகே மனம் மாறு
இந்த சேறோடு
வந்து சேரு
பிறகு பாரு
நம்ம வாழ்க்கை
ஆகிடும் ஜோரு

எழுதியவர் : புதுவைக் குமார் (16-May-19, 8:05 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 277

மேலே