காதல்

தங்கமே உந்தன் அங்கமெல்லாம் தங்கமாய்
ஜொலிக்கிறதே தங்கம் ஏதும் நீ அணியாமலே
சிவந்த தாமரையாய் உன் வட்டமுகம் ரத்தினமானதே
வஞ்சிக் கொடியாளே அசைந்து அசைந்து
அன்னம்போல் நீ நடந்து போவதெங்கே சொல்வாயா
என்றெல்லாம் அவளை பார்த்து கேட்க தோணியது
அப்போது என்னுள்ளம் பேசியது ……..
அவள் அழகை நீ ரசித்தது சரி தப்பில்லை
அந்த அழகை அழகாக்கும் அவள் உயிரை
நீ கேட்டாயா உன்மேல் காதல் உண்டா என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (16-May-19, 9:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 197

மேலே