லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்

ஜெ,


இங்கிலாந்தில் வசிக்கும் , தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து ‘லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் ‘ என்ற அமைப்பை நாள்: ஜூன் 1, 2019 தேதி தொடங்குகிறோம்.



இந்த அமைப்பின் நோக்கம் வாசிப்பில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் ஆர்வம் உள்ள மற்ற நண்பர்களுடன் கலந்துரையாட வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சன கூட்டங்களை ஒருங்கிணைப்பதுமாகும்.



தொடக்க விழாவன்று விமர்சனம் மற்றும் கலந்துரையாடலுக்கு லண்டனில் வசிக்கும் மூன்று எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.



அவை:



சிறுகதை தொகுப்பு



அனோஜன் பாலகிருஷ்ணன் – பச்சை நரம்பு



சிவா கிருஷ்ணமூர்த்தி – வெளிச்சமும் வெயிலும்





உப்புவெலி- ராய் மாக்ஸ்ஹாம்- மொழிபெயர்ப்பு -சிறில் அலெக்ஸ்



விழாவில் மூன்று எழுத்தாளர்களும் கலந்து கொள்கின்றனர். விமர்சன உரைகளுக்கு பிறகு எழுத்தாளர்களுடனான கலந்துரையாடலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.



ஆங்கில எழுத்தாளரும் உப்பு வேலியின் ஆங்கில மூலத்தை எழுதிவருமான ராய் மாக்ஸாம் இக்குழுமத்தை தொடங்கி வைத்து தலைமையுரையாற்ற இசைந்துள்ளார்.



தற்போது யூ. கே விலோ ஐரோப்பாவிலோ வசிக்கும் தமிழ் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரையும் இவ்விழாவில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.



கலந்து கொள்ள ஆர்வம் உங்கள் நண்பர்கள் கீழுள்ள மின்னஞ்சலில் எங்களுக்கு 25 மே விற்கு முன் தெரியப்படுத்த கேட்டுக் கொள்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.



தொலைபேசி: அனோஜன் -07747373497; தன்ராஜ் மணி – 07719755425

நாள்: ஜூன் 1, 2019



இடம்: டிரினிட்டி சென்ட்டர், ஈஸ்ட் அவென்யூ, ஈஸ்ட் ஹாம், E12 6SG

நேரம்: மாலை 4 முதல் 7 வரை



இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி நிரலையும் உங்கள் தளத்தில் வெளியிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்

எழுதியவர் : லண்டன் தமிழ் இலக்கியக் கு (17-May-19, 4:08 am)
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே